செய்திகள்ஜோதிடம்

05-06-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

Related image                                                                                

 

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு

ஸ்ரீ விகாரி வருஷம் வைகாசி மாதம் 22ஆம் நாள், ஜூன் 5ஆம் தேதி புதன்கிழமை

மதியம் 1.38 வரை த்விதியை பிறகு த்ரிதியை

இரவு 11.41 வரை திருவாதிரை நக்ஷத்திரம் பிறகு புனர்பூசம்

ராகுகாலம் : மதியம் 12.00 – 1.30

எமகண்டம் : காலை 7.30 – 9.00

நல்ல நேரம்: காலை 10.30 – 11.30 மாலை 4.30 – 5.30

சூலம் : வடக்கு

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:

அஸ்வதி:

நண்பர்கள் உதவி கிட்டும். வேலைக்காகக் காத்திருப்போருக்கு வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் நன்மை ஏற்படும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பரணி:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பயணங்களின் போது கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். பிறர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அரசியல் கருத்துக்களை நேரிலோ, சமூக வலைத்தளங்களிலோ பேசவேண்டாம்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

கார்த்திகை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.
விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

முருகனை வழிபட அல்லல்கள் தீரும், நன்மை பெருகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

ரோகிணி:

பணம் வரும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்காலத்திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அது வெற்றிகரமாக அமையும்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மிருகசீர்ஷம்:

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நீண்ட நாள் வாட்டிய பிரச்சனை முடிவுக்கு வந்து நிம்மதி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். கலைத்துறையினர் வெற்றி வாகை சூடுவார்கள்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் சேர்க்கும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

திருவாதிரை:

உடல் நலனில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். இயந்திரப் பணியாளர்கள் வேலையில் கவனம் தேவை. அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

புனர்பூசம்:

சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு மூலம் குடும்ப விஷயங்கள், சுப நிகழ்வுகள் குறித்த நல்ல முடிவுகள் வந்து அதனால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய ஆடை, தங்க நகை/நாணயம் வாங்கிச் சேர்ப்பீர்கள்.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீர்ந்து நலம் பெருகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூசம்:

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிட்டும். தொழில்துறையினருக்கு நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள்.

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கிச் சீரான நாளாக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஆயில்யம்:

முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும்.

ஸ்ரீதுர்க்கையை வழிபட நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மகம்:

நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். பணம் வரும் நாள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கணபதி வழிபாடு நன்மைகள் சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.

பூரம்:

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களில் கவனம் அவசியம். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். பொது நிகழ்வுகள், அரசியல் குறித்து கருத்துக் கூற வேண்டாம்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திரம்:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஹஸ்தம்:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி சிறப்புகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சித்திரை:

நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். பண வரவு இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கைகூடும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்வாதி:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம்.உடல் நலனில் கவனம் அவசியம்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

விசாகம்:

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிட்ம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து குதூகலம் ஏற்படும். விற்பனைத் துறையில் உள்ளோர் இன்றைக்கான இலக்கை எளிதில் எட்டுவார்கள். தீடீர் பணவரவுக்கு இடமுண்டு. எடுத்த முயற்சிகள் கைகூடும். தங்கம், வெள்ளி நகை, பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

முருகனை வழிபட அல்லல்கள் அகன்று நலம் பெறலாம். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

அனுஷம்:

எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும் நாளாக உல்ளது.

ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களை நீக்கி நல்ல நாளாக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.

கேட்டை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். புதிய ஆடை, தங்க நகை/நாணயம் வாங்கிச் சேர்ப்பீர்கள்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மூலம்:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். உங்களது நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும் நாள்.

பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூராடம்:

புதிய முயற்சிகள் வேண்டாம். இயந்திர சாதனங்களில் பணியாற்றுவோருக்கு கவனம் தேவை. பயணங்களில் கவனம் அவசியம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கடன் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திராடம்:

சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்களால் உதவிகள் கிட்டும். எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து தேவையான பணிகளை முடித்துக் கொள்வீர்கள். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்கோ, குழந்தைப் பேறுக்கோ காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

திருவோணம்:

மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பண வரவு குறித்த செய்தி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு கூடும். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் கழிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி சிறப்புகளைச் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

அவிட்டம்:

நீண்ட நாள் இழுபறியான ஒரு விஷயம் குறித்து நல்ல முன்னேற்றமான தகவல் வரும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு அல்லல்களை நீக்கி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சதயம்:

எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள்.நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

பூரட்டாதி:

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நீண்ட நாள் வாட்டிய பிரச்சனை முடிவுக்கு வந்து நிம்மதி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீரும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

உத்திரட்டாதி:

வியாபாரத்தில் லாபகரமான செய்தி வரும். புதிய ஒப்பந்தம் ஒன்றைப் பேசி முடிப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ரேவதி:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் விரும்பிய பணி/இட மாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்ரீ மாத்ரே நம:

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎

(Visited 19 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close