போபால்: பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மத்திய பிரதேச உயர் நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த ஆண்டூ ஜூன் 30 அன்று, மத்திய பிரதேசத்தில் 4வயது சிறுமியை ஆசிரியர் மகேந்திர சிங் கோந்த் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த வழக்கில் மகேந்திர சிங்-க்கு சாத்னா கூடுதல் மாவட்ட விசாரணை நீதிமன்றம் அனைத்துக் கட்ட விசாரணையையும் முடித்த பின் ஜபல்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அதன் படி மகேந்திர சிங் மார்ச் 2ம் தேதி காலை 5 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளார்.
அதே வேளையில் மார்ச் 2 ஆம் தேதிக்குள் அவர் உச்ச நீதி மன்றத்தை நாடலாம் என்றும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கோரி தண்டனையைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.