தினம் ஒரு குறள் – சொல்வன்மை
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
வரிசையாகச் சொல்லபட வேண்டியதை அதன் வரிசையில் இனிமையாகச் சொல்லும் ஆற்றல் உடையவனின் சொல்லை உடனே ஏற்றுக் கொள்ளும் உலகம்.
வரிசைப் படுத்துதல் என்ற உயரிய பண்பை உலகத்திற்குச் சொன்னவர்கள் தமிழர்கள் என்பது இக்குறளின் மூலம் நிரூபனமாகிறது. அதென்ன வரிசைப்படுத்துதல்?
முதலில் எதைச் சொல்வது, அடுத்து என்ன சொல்வது, பின்னர் சொல்ல வேண்டியது என்ன? என்பதுதான் வரிசைப் படுத்துதல்.
வரிசைப்படுத்துதல் அவசியமா? ஆம்
! மிக மிக அவசியமானது! நாம் அனைவரும் அறிந்த ஒன்றைச் சொல்லி, உங்கள் கவனத்தை வரிசைப்படுத்துதலில் ஈர்க்க விரும்புகிறேன்.
பள்ளியில் அனைவருக்கும் முன்னேற்றப் பதிவேடு (Progress Report) என்ற ஒன்றைக் கொடுப்பார்கள். அதில், அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களில், நாம் எத்தனையாவது இடத்தில் நிற்கிறோம் என்பதை தரம் பிரித்திருப்பார்கள். இதற்குப் பெயர்தான் வரிசைப் படுத்துதல்!
இதை ஏன் வைத்தார்கள்?
முன்னர் இருப்பவர்களைப் பார்த்து, பின்னர் இருப்பவர்கள் தன்னை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கம்தான், வரிசைப் படுத்துவதின் இலக்கு!
பெரும்பாலும், குறள்களுக்குள் புகுந்து விவரிக்கும் தன்மை இல்லையெனினும், இங்குள்ள நீதியை விளக்க, நீண்ட விளக்கம் அவசியமானது.
– சுரேஜமீ