உலகம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

தனி நபர் உரிமை மறுக்கப்பட்ட தேசம் – கியூபா : பகுதி -3 – ராமலிங்கம்

கட்டுரை எழுத்தாளர் – ராம லிங்கம் . சிங்கப்பூரில் மின்னியல் துறையில் பணியாற்றி வருகிறார்.

தனிமனித உரிமை முற்றிலும் மறுக்கப்பட்ட நாடு கியூபா. எதிர்க்கருத்தே வைக்க முடியாத நாட்டில் எதிர்க்கட்சி எப்படி இருக்க முடியும்? அதுதான் கியூபாவின் கடந்த ஐம்பது ஆண்டு நிலை. தேர்தல் கிடையாது. PCC (Communist Party of Cuba) வின் தலைவர்களை அந்த அமைப்பே அதிபர் , அமைச்சர்களை நியமித்துக் கொள்ளும். ஒருவேளை எதிர்க்கட்சிகள் என சில அமைப்பினர் அமெரிக்காவிலிருந்தோ மற்றும் எங்குமிருந்தோ பணம் பெற்றால் தண்டனைக்குரிய குற்றம். மக்களின் அபிமானம் பெற வேண்டியதில்லை. ஆட்சியை எதிர்த்துப் பேச முடியாது. ஆனால் மக்கள் பிடல் காஸ்ட்ரோவையும், அவரது சகோதரனும் தற்போதைய அதிபருமான ராவுல் காஸ்ட்ரோவையும் போற்றுகிறார்களாம். மன்னராட்சி முறைக்கும், கம்யுனிஷ ஆட்சி முறைக்கும் என்ன வித்தியாசமுள்ளது.

அப்படியே இந்தப் பக்கம் இந்தியாவில் கம்யுனிஸ்டுகள் எப்படி பேசித் திரிகிறார்கள் என பாருங்கள். ஜன நாயக முறைப்படி நடக்கும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வென்றால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்பர். ஆளுங்கட்சியே வெற்றி பெற்றால் தேர்தல் மெஷினில் முறைகேடு, பண நாயகம் என்பார்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டக் கூடாதா என நியாயம் பேசித் திரியும் கம்யுனிஸ்டுகள் கியூபாவிலோ, சீனாவிலோ ஏன் சாத்தியமில்லை என்று கேள்வி எழுப்பவில்லை என்பது ஒருமுறமிருக்க, வெட்கமே இல்லாமல் இந்தியாவிலிருந்து கொண்டே கியூபாவை புகழ்ந்து எழுதுவதையும் பேசித் திரிவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்.

கியூபா பலநாடுகளுக்கு தன் மருத்துவர்களை அனுப்பிவைத்து இலவச மருத்துவ சேவை செய்வது போன்ற  பொய்ச் செய்தியை பரப்பி கொண்டிருக்கிறது நம்ம ஊரு வாடகை போராளிகள் கூட்டம். உண்மையில் கியூபா தன் மருத்துவர்களை உலகெங்கும் அனுப்பிக்கொண்டிருப்பது இலவச சேவை செய்ய அல்ல, தன்னிடம் உள்ள கூடுதல் ஆதாரத்தை வாடகைக்கு விட்டு பொருள் ஈட்டவே. இந்தியா போன்ற நாடுகளிலிருந்தும் பொறியாளர்கள், மருத்துவர்கள் மேலைநாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டுகின்றனர், அதற்காக நாங்கள் பொறியியல் சேவை செய்கிறோம், மருத்துவ சேவை செய்கிறோம் என்று சொல்வதில்லை. கம்யுனிஸ்டுகளின் கம்யுனிஷ நாடுகளின் மீதான பாராட்டுப்பத்திரத்தை, இதனோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

மேலும் இந்தியர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்தை நேரடியாக அவர்களே தங்கள் கணக்கில் வைத்து கொள்வதும் உரிமை கொள்வதும், அந்தப் பணத்திற்கு இந்தியாவில் அவர்கள் வரிகூட கட்டவேண்டியதில்லை என்பது போன்று அல்ல கியூபா மருத்துவர்களின் நிலை. மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விபரங்களை முதல் பகுதியில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் உள்ள கட்டற்ற சுதந்திரத்தால் அரசின் உச்சபட்ச பதவியில் இருக்கும் ஒருவரைக் கூட கேள்விகேட்க முடிவது போன்று அல்லது மீம்ஸ் போட்டுக் கிண்டலடிப்பது போன்று கியூபாவில் நடந்துகொண்டால் தயவு தாட்சண்யமின்றி உடம்பில் இருந்து உயிர் வெளியேற்றப்படும், அதுவும் சட்டப்படி. 2017-18 இல் செய்திகளை சட்டத்திற்கு உட்பட்டு முறையாக வெளியிட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மட்டும் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்ட எண்ணிக்கை 2000.

அரசை மறைமுகமாக விமர்சனம் செய்வோர் மீது குண்டர்களை ஏவி தாக்குவது, பொதுஇடத்தில் வைத்து கேவலப்படுத்துவது, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் வேலையைவிட்டு தூக்குவது, அதன் மூலம் அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடியை உருவாகுதல் என பல அடக்குமுறைத் தந்திரங்களை கியுபா அரசாங்கம் பயன்படுத்துகிறது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் பொது மக்கள் என இவர்களை அச்சுறுத்துவதற்கும், துன்புறுத்துவதற்கும் என தனியே சட்டமியற்றி தடுப்புக்காவல் மற்றும் குறுகிய கால சிறைவாசம் என கொடுமைப்படுத்துகிறது, இதையெல்லாம் கேட்கும்போது ஹிட்லர் கூட தன் சொந்த நாட்டு மக்களிடம் இப்படி நடந்திருக்கவில்லை என தோன்றினால் நீ தோழர்களின் எதிரியாவாய். புரட்சியின் மூலம் அதிகாரத்தை அடைந்த பெரும்பாலான நாடுகள் ஏனோ அதிகாரத்தில் அமர்ந்ததும் சர்வாதிகாரிகள் ஆகின்றனர். ஆள்பவர்கள் தங்கள் பதவியை தக்கவைத்து கொள்ள எடுத்துக்கொண்ட முகமூடிதான் மார்க்ஸின் கம்யுனிசம். மற்ற எல்லா மதங்களும் நாகரித்திற்கேற்ப நடைமுறை சாத்தியங்களுடன் பல புதிய அணுகுமுறைக்குள் செல்கிறது. கம்யுனிஷ மதத்தில் சோஷலிஸ பொருளாதாரம் முற்றிலும் தவறான கொள்கை என்று புரிந்து கொண்டு அதிலிருந்து வெளிவந்துள்ள கம்யுனிஷ நாடுகள், அதிகாரத்தைப் பொறுத்த வரையில் சர்வாதிகார மன்னராட்சியை மட்டுமே பின்பற்றி வருகிறது. பாசிச அரசு என்பதற்கான ஆணிவேரை மையமாக வைத்துள்ள கொள்கையுள்ள கட்சி உலகில் கம்யுனிஷம் மட்டுமே!

(Visited 78 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close