தெலுங்கான முதல்வர் சந்திர சேகர் ராவ் அவர்களின் பிறந்த நாள் பிப்ரவரி 17 ஆகும். காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலைக் கண்டித்த அவர், தேசத்திற்காக பல வீரர்கள் தங்கள் உயிரைத் தந்துள்ளனர். இந்த நிலையில் நாம் அவர்களோடும் அவர்களின் குடும்பத்தோடும் துணை நிற்போம். அரசிற்கு தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்போம்.
எனவே இந்த நிலையில் பிறந்தநாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்றும், தமது கட்சித் தொண்டர்களும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்தியா என்ற நாடு ஒரே தேசமாக விளங்குவதற்கு இது போன்ற இக்கட்டான நிலையில் தலைவர்கள் குரல் கொடுப்பதுதான் முக்கிய காரணியாகும். தேசத்திற்காக தியாகம் செய்யும் வீரர்களுக்கு இதையாவது செய்வோம் என்று பல துறையினரும் ஆதரவு அளித்து வருவது தேச ஒற்றுமையை வலுப்படுத்தும். எதிரிகளை ஒருங்கிணைந்து எதிர்க்கவும் உதவும்.