ஒரு வரிச் செய்திகள்
புகழ்பெற்ற எழுத்தாளர் மரணம்.
ஹிந்தி மொழியின் முன்னணி எழுத்தாளராகிய திருமதி கிருஷ்ணா சோப்தி இன்று புதுடெல்லியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. 1925ஆம் ஆண்டு தற்போதுள்ள பாகிஸ்தான் பகுதியில் பிறந்த இவர், பிரிவினக்குப் பிறகு இந்தியாவில் வசித்து வந்தார்.
சிந்தகிநாமா என்ற நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. கலாசூடாமணி விருது மற்றும் சிரோன்மணி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்த கிருஷ்ணா சோப்தி டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
(Visited 29 times, 1 visits today)
0