உலகம்ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து -துப்பாக்கி சூடு-பங்களாதேஷ் கிரிக்கட் அணி தப்பித்தது

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து -துப்பாக்கி சூடு.பலர் இறந்திருக்கலாம் என அச்சம்
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரத்தில் இன்று இரு மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் மசூதிக்கு உள்ளே சென்று கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன . .
பிரதம மந்திரி ஜேசிண்டா அர்டேன் “நியூசிலாந்தின் இருண்ட நாட்களில் ஒன்றாக மாறிப்போனதாக தெரிவித்தார்.
கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள நகரங்களில் நிகழும் சம்பவங்கள் “ஒரு அசாதாரணமான மற்றும் அசாதாரணமான வன்முறைச் செயலை” பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளன என்றார்.

துப்பாக்கி சூடு சம்பவமானது பங்களாதேஷ் கிரிக்கட் அணி தங்கி இருக்கும் இடத்துக்கு அருகில் நடைபெற்றதாக தெரிகிறது. இதனால் நியூசிலாந் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையேயான கிரிக்கட் தொடர் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 39 times, 1 visits today)