ஆண்டுக்கொருமுறை கல்வித் தர அறிக்கை வெளியிடப்படுகிறது.தற்போது 2018 ஆம் ஆண்டிற்கான கல்வி அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் முன்னேற்றம் இருந்தாலும் இன்னமும் இந்தியா கல்வித் துறையில் செல்ல வேண்டிய தூரம் அதிகமுள்ளது என்பதையே அறிக்கை சொல்கிறது. 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 56% அடிப்படை கணக்கும் தெரியவில்லை . மூன்று இலக்க எண்ணை ஒற்றை இலக்க எண்ணால் வகுக்கத் தெரியவில்லை. 72%, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் தெரியவில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 70 சதவீதத்தினருக்கு கழித்தல் கணக்குக் கூட தெரியவில்லி. மேலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 27%க்கு வாசிக்கவும் தெரியாமல் உள்ளனர்.
ஆண்கள் பெண்கள் சேர்க்கை எண்ணிக்கை வித்தியாசம் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 66.% பெண் மாணவிகளுக்கு கழிப்பறை வசதி உள்ளது. 2014 ல் 55.7% ஆக இருந்தது.
3 ம வகுப்பு படிக்கும் மாணவர்களில் 2 ஆம் வகுப்பு பாடங்களை வாசிக்கத் தெரிந்தவர்கள் 27.2% (2018), 23.6% (2014), 19.5% (2010) என்ற அளவில் இருந்தது. இதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.