போலந்து :
போலந்தின் டேன்சிக் நகர மேயர் அறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்ற போது திடீரென ஒரு நபரால் கத்தியால் குத்தப்பட்ட பாவேவூ அடமோவிட்ச் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இக்கொலையைச் செய்ததாக ஸ்டெஃபான் என்ற நபரை போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். மக்கள் முன்னிலையிலேயே இக்கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. முன்னரே குற்றப் பின்னணி கொண்ட அந்த நபர் ஊடக நுழைவுச் சீட்டை பயன்படுத்தி மேடைக்கு சென்றதாக போலீசார் நினைக்கின்றனர். ஆனால் அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கவில்லை.
அடமோவிட்ச் இறந்தார் என்றும், பாவேவூ அடமோவிட்ச் மேயரின் கட்சியால் தாம் தவறாக தண்டிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர் மேடையிலேயே கத்தியுள்ளார்.
அடமோவிட்ச் இறந்துவிட்டார் என்பதை போலந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் லூகாஸ் சுமோவ்ஸ்கி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் அறக்கட்டளை நடத்திய மிகப் பெரிய இசை நிகழ்வு ஒன்றில் அடமோவிட்ச் பங்கேற்றபோது இந்த நிகழ்வு நடந்தது. மருத்துவமனைகளுக்கு கருவிகள் வாங்குவதற்காக தன்னார்வலர்கள் ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சி இது.