பஞ்சாப், ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ மூலக்கல் என்ற பாதிரியார், கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை , 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிராங்கோ மூலக்கல், பிஷப் பொறுப்பில் இருந்து விலகினார்.
பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக ஜலந்தரில் உள்ள “மிஷனரிஸ் ஆப் ஜீசஸ் “சபையைச் சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள், கேரளாவில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் போராட்டம் நடத்திய 4 கன்னியாஸ்திரிகளும் கோட்டயம் , குருவிலாங்கோடு ,கான்வென்ட் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு ஜலாந்தரில் உள்ள “மிஷனிரிஸ் ஆப் ஜீசஸ் அமைப்பு” நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் அவர்கள் நான்கு பேரும் கான்வென்டில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர். பாலியல் பலாத்காரம் பண்ணிய காமக்கொடூர பாதிரியாரை பதவி விலக சொல்லிவிட்டு, உரிமைக்காகப் போராடிய கன்னியாஸ்திரிகளை கிருத்துவத்தின் மீதான தாக்குதல் என்று பார்த்து வெளியேற்றி இருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது தான்.