புதுடெல்லி: பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகள் இருக்கும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் படி, 59,000கோடி ரூபாயை பிரான்சிலிருந்து வாங்கு ரபேல் விமானங்களுக்கு செலுத்தியது மத்திய அரசு. 2016 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது செலுத்தியிருக்கும் தொகை 50% க்கும் அதிகமென்று சொல்லப்படுகிறது.
இந்திய விமானப்படை முதல் நான்கு ஜெட் விமானங்களை செப்டம்பருக்குள் பெறுகிறது. இதற்கு பயிற்சியளிக்க 10 விமான ஓட்டிகள், 10 பொறியாளர்கள், 40தொழில் துறை டெக்னிஷியன்கள் வருகிறார்கள். 2016 ஒப்பந்தந்த்தின் படி, 36 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன. இவையனைத்தும் 2019 டு 2022 க்குள் இந்தியாவிற்கு வந்துவிடும். அரசு இனி ஒவ்வொரு விமானத்திற்கும் அது டெலிவரி செய்யப்படும் போது மீதியுள்ள முழு பணத்தையும் செலுத்தும். இன்னும் ஆறு மாதத்திற்குள் மென்பொருள் சர்டிபிகேட் பெரும் பணி முடிந்துவிடும். இந்தவிமானங்கள் அனைத்தும் அம்பாலாவிலுள்ள விமானப்படைத்தளத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. அம்பாலா, ஹசிமாரா ஆகிய இரு இடங்களும் இதை நிறுத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அரசு இதற்கு 450 கோடி செலவழிக்கத் திட்டமிட்டுள்ளது.
சீனா, பாகிஸ்தான் இரு நாடுகளையும் எதிர்கொள்ள தற்போதைய மத்திய அரசு அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 126 ரபேல் விமானங்களுக்கு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தியது . இறுதிவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.