நடிகர் ரஜினிகாந்த் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தனது இலக்கு சட்ட மன்ற தேர்தல் தான் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனால் தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சினை தண்ணீர் தான் என்றும் அந்த பிரச்சனையை தீர்ப்பவர்களுக்கே மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் அறிவறுத்தியுள்ளார்.
ரஜினிகாந்த்தின் அறிக்கையிலுள்ள இந்த வரிகள் முக்கியமான ஒன்றை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் எண்ணுகின்றனர்.
தமிழகத்தில் காவேரி நீர் பிரச்சினை தற்போது சுமூக தீர்வு காணப்பட்டு இப்போது மேகத்தட்டு அணை விவகாரத்தில் கூட மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு ஆதரவான நிலையையே உச்ச நீதிமன்றத்தில் ஆவணமாக சமர்பித்தது. ஆகவே பாஜக – அதிமுக கூட்டணிக்கே தனது மறைமுக ஆதரவை. ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவிக்காமல் இவ்வாறு தெரிவிக்கிறார் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.