புதுடெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் உள்ளே செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல அமைப்புகள் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. இதை எடுத்துக் கொள்வதாக கடந்த டிசம்பரில் அறிவித்த உச்ச நீதிமன்றம், இது சம்பந்தமான விசாரணை ஜனவரி 22 ல் இருக்குமென தள்ளி வைத்திருந்தது.
இந்நிலையில் நீதிபதி இந்து மல்கோத்ராவின் உடல் நிலை காரணமாக அவரால் பங்கேற்க இயலாத நிலை உள்ளதால் தற்போதைக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி ககன் கோகாய் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் ஐயப்ப பக்தர்களின் மனம் ஏற்கனவே புண்பட்டுள்ள நிலையில் சீராய்வு மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் விரக்தியில் உள்ளனர்.
(Visited 21 times, 1 visits today)
+1