தெற்கு ரயில்வே பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி பண்டிகையை ஒட்டி தென்னிந்திய சுற்றுலா ரயில்களை அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து 16ம் தேதி புறப்பட்டு மேல்கோட், மைசூர்,கூர்க்,தலைக்காவேரி என சுற்றுலா இடங்களாக சென்று 20ம் தேதி மீண்டும் மதுரை வந்து சேரும்.
பயண கட்ணம் 5635 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தங்கும் இடம் மற்றும் உணவு , 5 லட்சம் வரையிலான காப்பீடு, மருத்துவ சேவை என அனைத்தும் உள்ளடக்கிய கட்டணம் இது. 650 சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக வட கேரளா , தெற்கு கேரளா , மூகாம்பிகை சிறப்பு ரயில்கள் என 3 சுற்றுலா சிறப்பு ரயில்கள் மதுரையை மையமாகக் கொண்டு ஜனவரி 22 -26 தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
மற்றுமொரு சுற்றுலா ரயில் ரத சப்தமி என்ற பெயரில் பிப்ரவரி முதல் வாரம் முதல் 13ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.
மேலும் கும்பமேளா சிறப்பு ரயில் ஒன்றும் மதுரையில் இருந்து இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.