புதுடெல்லி : விவசாய மானியம், உர மானியம் உட்பட அனைத்திற்கும் நேரடியாக பணமாகவே விவசாயிகளுக்குத் தந்துவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 70,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் விவசாய மானியத்திற்கான தொகையாக ஒதுக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டமிட்டுள்ளார். இவற்றை மார்ச் 31 க்குள் க்குள் அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நேரடிப் பணமாகத் தருவதால் விவசாயிகளின் கஷ்டங்கள் குறையும் என்று அரசு நினைக்கிறது.
இதைத் தவிர கூடுதலாக செலவழிக்கப்படும் பணத்தால் தேசிய ஆண்டு பற்றாக்குறை அதிகமாகாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்த உள்ள நாட்டு உற்பத்தியில் பட்ஜெட்டில் பற்றாக்குறை 3.3% ஐத் தாண்டாமல் இருக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மோடி இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக இதைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். விவசாயிகளுக்கு தங்கள் கஷ்டங்களைப் போக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று நம்பிக்கை தர அரசு திட்டமிடுகிறது.