பெங்களூரு :
கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார். வராத உறுப்பினர்கள் மீது கட்சியை விட்டு நீக்கப்படுவீர்கள் என்றும் தெரிவித்திருந்தார். இருப்பினும் இன்றைய கூட்டத்தில் நான்கு காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
கலந்து கொள்ளாத நான்கு பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். நான்கு பெரும் மும்பையில் உள்ள ஹோட்டலில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே இரு சுயேட்சை சட்டசபை உறுப்பினர்கள் காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் காங்,- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி தற்போது நடக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக இது அமைந்தது. அதிக இடங்களைப் பெற்றும் பாஜகவால் மெஜாரிட்டிக்குத் தேவையான 112 எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால் மெஜாரிட்டி நிருபிக்க இயலாமல் ஆட்சியை விட்டு இறங்கியது. பிரதான எதிர்கட்சியான பா.ஜ.வுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது மொத்தமுள்ள 224 இடங்களில் இக்கூட்டணிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரசிடம் 80 எம்.எல்.ஏ.க்களும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் 37 எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி கட்சியான பிஎஸ்பியிடம் ஒரு எம்.எல்.ஏவும் உள்ளது.
எந்த நேரம் என்ன நடக்குமென்பதே தெரியவில்லை. பாஜக, காங்கிரஸ், மஜத ஊன்று கட்சிகளும் தங்கள் சட்டசபை உறுப்பினர்களைப் பாதுகாக்கவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை பெறுவது/தக்கவைப்பது என அனைத்து வழிகளையும் கடைபிடிக்கின்றனர்.