செய்திகள்விளையாட்டு
கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ வரி ஏய்ப்பு? விசாரணைக்காக மாட்ரிட் திரும்புகிறார்
மாட்ரிட்: கிறிஸ்டியானா ரொனால்டோ வரி எய்ப்பு செய்தார் என்று ஸ்பெயின் நாட்டின் குற்றவியல் வழக்கறிஞர் புகார் தொடுத்த வழக்கில், வரி ஏய்ப்பு செய்தமைக்காக 23 மாதங்கள் அவருக்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டுமென்றும், அபராதம் விதிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இவ்வழக்கிற்காக வரும் செவ்வாய் கிழமை மாட்ரிட் திரும்புகிறார்.
ஏற்கனவே இவ்விவகாரத்தில் வரி ஏய்ப்பு அலுவலகம் எதிர்ப்பார்க்கும் 5.7மில்லியன் டாலர்கள் ஏற்கனவே கட்டப்பட்டதாகவும், மீதமுள்ள வட்டித் தொகையான 1 மில்லியன் டாலர்களே செலுத்த வேண்டியுள்ளது. ஒரு மில்லியன் டாலர்களைச் செலுத்த சரியென்றால், பெரும்பாலும் அவர் சிறைக்குச் செல்ல மாட்டார் என்று தெரிகிறது.
(Visited 22 times, 1 visits today)