உலகம்

வரலாற்றில் இன்று – ஜனவரி 20 – கான் அப்துல் கபார் கான்.

அன்று இந்தியாவில் இருந்த வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில், எப்போதும் போரிடும் ஆப்கானிய வம்சாவளியைச் சார்ந்த பட்டான் இனத்தில் பிறந்து மஹாத்மா காந்தியின் சீடராக, அகிம்சை வழியில் நடந்து எல்லைக்காந்தி என்றும், ஆப்கானத்தின் பெருமை என்றும் தளபதிகளின் தலைவர்  என்று புகழ் பெட்ரா கான் அப்துல் கபார் கானின் இறந்த தினம் இன்று.

1890ஆம் ஆண்டு பிறந்த கபார் கான் தனது வாலிபப்பருவத்திலேயே பட்டான் சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளைத் தொடங்கினார். மதநல்லிணக்கவாதியாகவே வாழ்ந்த கபார்கான் காந்தியின் அகிம்சை வழியைப் பின்பற்றி சிகப்புச்சட்டைப் படையை அமைத்தார். ஏறத்தாழ ஒரு லட்சம் தொண்டர்களைக் கொண்ட அந்த அணி வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அமைதிவழியில் சத்தியாகிரகப் போராட்டங்களை நடத்தியது.

காந்தியின் நண்பராகவும், சீடராகவும் இருந்த அப்துல் கபார்கான் எல்லைக் காந்தி என்று புகழப்பட்டார். தேசப் பிரிவினையை கடுமையாக எதிர்த்த கான் தேசம் துண்டாடப்படும் என்று முடிவானபோது ” எங்களை ஓநாய்களிடம் தள்ளி விட்டு விட்டர்கள் ” என்று காங்கிரஸ் கட்சியைச் சாடினார்.

வடமேற்கு மாகாணமும் ஆப்கானித்தானின் சில பகுதிகளையும் இணைத்து சுதந்திர பதுனிஷ்தான் என்ற நாட்டை உருவாக்கக் கோரிக்கை வைத்தார். ஆனால் அது பிரிட்டிஷாரால் நிராகரிக்கப்பட்டது.

இறுதிவரை பாகிஸ்தான் அரசு இவரை எதிரியாகவே பார்த்தது. சுதந்திர பாகிஸ்தானில் இவர் பெரும்பான்மையான ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டி இருந்தது. வீட்டுக்காவலில் 1988 ஆம் ஆண்டு கான் மரணமடைந்தார். அன்றய ஆப்கான் ஜனாதிபதி முஹம்மத் நஜிபுல்லா மற்றும் இந்தியப் பிரதமர் ராஜிவ் உள்பட ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் இவரது இறுதிச் சடங்குகளில் பங்கு பெற்றனர். இந்திய அரசு ஐந்து நாட்கள் அரசு முறை துக்கம் அனுஷ்டித்து.

1987ஆம் ஆண்டு இந்திய அரசு கான் அப்துல் கபார்கானுக்கு இந்தியாவின் மிக உயரிய பாரத்ரத்னா விருது வழங்கி கவுரவித்தது

(Visited 224 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close