பஞ்சாப்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபட்டுவிடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால் கூறியதாவது , வரும் பாராளுமன்றத் தேர்தலில் பஞ்சாபில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்தார். இன்னும் 12நாட்களில் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
பாஜக தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் நாட்டைச் சிதைத்து வருவதாகவும் மக்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைப்பதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்தார். மீண்டும் பாஜகஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபட்டுவிடும் என்றும் குறிப்பிட்டார்.
(Visited 22 times, 1 visits today)
+1