புதுடில்லி : புதுடில்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடிக்கு கிடைக்கப்பெற்ற பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு, மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள், தலைப்பாகை என இதுவரை 1800 க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் வந்துள்ளன. இந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் டில்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுப் பொருட்களை இந்த மாதம் ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அறிவித்துள்ளார்.
(Visited 23 times, 1 visits today)
+3