புதுடெல்லி: கேரள உயர்நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை செய்யும் நீதிமன்றங்களுக்கு நீதித் துறை அதிகாரிகள், நீதிபதிகளை நியமிக்க, எஸ்சி எஸ்டி பிரிவினர் தேர்வாகக் கஷ்டப்படுவதாக இருந்தால் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறையுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.
கேரள உயர்நீதிமன்றத்தில் நீதித் துறை அதிகாரிகளை நியமிக்க , எஸ்சி பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களாக 35% மதிப்பெண்களும், முதன்மை தேர்வில் 40% மதிப்பெண்களும் எடுக்கவேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 3 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை அடுத்து வழக்கு உச்காநீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது.
“எஸ்சி எஸ்டி பிரிவினரால் நீங்கள் வைத்துள்ள குறைந்த பட்ச மதிப்பெண்களைப் பெற முடியவில்லை என்றால் இன்னும் தகுதி மதிப்பெண்ணைக் குறையுங்கள்.” அப்போதுதான் அவர்களும் நீதித் துறை அதிகாரிகளாக, நீதிபதிகளாக வர இயலும் .
2700 இடங்களுக்கு இதுவரை 45 பேர் தான் தேர்வாகியுள்ளனர். 31 பொதுப்பிரிவினர் தேர்வாகி உள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மத்திய சட்ட அமைச்சரவை கொடுத்த தகவலின் படி எஸ்சி பிரிவினரில் 14% க்கும் கீழாகத் தான் கீழ் நீதிமன்றங்களில் நீதித்துறை அதிகாரிகளாக உள்ளனர் என்றும் இது அவர்களது மக்கள் தொகையான 16% க் காட்டிலும் குறைவு என்றும் தெரிவித்து இருந்தது. எஸ்டி பிரிவல் 12% கீழ் நீதிமன்றங்களில் நீதித்துறை அதிகாரிகளாக உள்ளனர் என்றும் அவர்களது 8% மக்கள்தொகையைக் காட்டிலும் அதிகம் என்றும் தெரிவித்திருந்தது.
கீழ் நீதிமன்றங்களில் 28% பெண்கள் நீதித்துறை அதிகாரிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.