இன்று(28-01-2019) மாலைக்குள் வேலைக்குத் திரும்ப விரும்பும் ஆசிரியர்களுக்கு அவா்கள் விரும்பும் ஊர்களுக்குப் பணியிட மாறுதல் வழங்கத் தயாராக உள்ளதாக தமிழக அரசு உள்ளதாக அறிவித்துள்ளது.
கிண்டர் கார்டன் பள்ளிகளில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களிச் சேர்க்கக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.
இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்றைக்குள் வேலைக்குத் திரும்பும் அரசுப் பள்ளி ஆசிாியா்களுக்கு அவா்கள் விரும்பும் பகுதிகளுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பணிக்கு திரும்பாதவா்களின் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.