ஏர்செல் -மேக்சிஸ் ஊழல் வழக்கு- நீதிபதி மன்றத்தால் தொடர்ந்து காப்பாற்றப்படும் சிதம்பரங்கள்

 

டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  நடைபெறும் ஏர்செல் -மேக்சிஸ்  ஊழல் வழக்கில்  மீண்டும்  நீதிபதி ஓ .பி.சைனி  சிதம்பரத்தையும் ,அவரஅவரது மகனையும்  கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியுள்ளார்..
2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தொடர்ச்சியான இன்னொரு ஊழல் வழக்கான ஏர்செல் -மேக்சிஸ் ஊழல் வழக்கு கடந்த பல ஆன்டுகளாக நடைபெறுகிறது. இந்த  இந்த வழக்கில்  காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளியும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முக்கிய குற்றவாளிகளாக சிபிஐ புலனாய்வு அமைப்பு வழக்கு தொடுத்து நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய  இந்நாள் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மேல் குற்றசாட்டு பதிவு செய்ய ,மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியது .
கடந்த மே மாதம் முதல் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டி தொடந்து சிபிஐ , நீதிபதி ஓ.பி.சைனியிடம் முறையிட்டு வந்தது..ஆனால் ஒவ்வரு முறையும்  நீதிபதி சைனி, சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து  வழக்கை நீட்டித்து வந்த நிலையில், இப்போது பிப்ரவரி 18 ம் தேதி வரை , கைது செய்ய கூடாது  என்று  வழக்கை தள்ளி வைத்து இன்று உத்தரவு வழங்கினார்.
ஏற்கனவே 2 ஜி அலைக்கற்றை வழக்கில்  கனிமொழி ,ராஜா உள்ளிட்ட அனைவரையும்  இதே நீதிபதி சைனி ,வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி விடுதலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 151 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *