ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 9 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வந்த போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
கால வரையற்ற இந்த போராட்டம் 22 ஆம் தேதி துவங்கியது. ஆனால் தற்போது தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். அதாவது சற்றுமுன் சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.
ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் முடிவில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தனர்.
மக்கள், மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக பொதுத்தேர்வுகள் வர உள்ளதால் இந்த போராட்டத்தை தற்காலிகமக கைவிடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.
(Visited 22 times, 1 visits today)
+1