சென்னை: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பல மாதங்களாக, “தேவேந்திர குல வேளாள மக்களை, பட்டியல்இன இட ஒதுக்கீட்டிலிருந்து வெளியேற்றி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் ” என்று கோரிக்கை வைத்து வருகிறார்.
பட்டியல் இனத்தில் இருப்பதால் தான் தங்களை மற்ற சமூகங்கள் ஒதுக்கி வைத்துப் பார்ப்பதாகவும், தங்களுக்கு கௌரவமே முக்கியம். எங்களது சமூக மக்கள் தங்கள் கல்வி அறிவின் மூலம் முன்னேறிக் கொள்வார்கள். எனவே தேவேந்திர குல வேளாள மக்களை பட்டியல் இன இட ஒதுக்கீட்டிலிருந்து வெளியே எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் புதிய தமிழகத்தின் தலைவர், திராவிடம் என்பது இனத்தைக் குறிக்கிறதா ? மொழியைக் குறிக்கிறதா? நிலப்பகுதியைக் குறிக்கிறதா? முதலில் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல சொல்லுங்கள் என்றும், ஆரியம் திராவிடம் என்பது புரட்டு என்றும் சில நாட்களுக்கு முன்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.
அவரின் இந்த அறிக்கைகளும் பாஜகவிடம் அவரது நெருக்கமும், வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அல்லது பாஜக அங்கம் வகிக்கும் அணியில் கூட்டணிக் கட்சியாக தேர்தலைச் சந்திப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் தென்காசி தொகுதியை டாக்டர் கிருஷ்ணசாமி குறி வைப்பதாகத் தெரிகிறது.