ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுப்ரமணியன் சுவாமி, சமஸ்கிருதத்தை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்தின் தாய்மொழியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று மேலும் கூறினார். சமஸ்கிருதத்தில் நிறைய அறிவுப் பொக்கிஷங்கள் உள்ளன. கணிதம், வானவியல், அறிவியல், சாஸ்திரங்கள் என பல விஷயங்களுக்கான அறிவுக் களஞ்சியம் சமஸ்கிருதத்தில் உள்ளது. மேலை நாடுகளில் உள்ள கல்லூரிகளில் தற்போது சமஸ்கிருதம் பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கணிப்பொறியில் செயற்கை அறிவை சேமிக்கும் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கருத்துரைத்துள்ளனர். எனவே சமஸ்கிருதம் பற்றி மாணவர்களுக்குக் கட்டாயமாக சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
(Visited 20 times, 1 visits today)
+2