தூத்துக்குடி: வரும் லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழி திமுக வேட்பாளராக களம் இறங்குவார் என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் தூத்துக்குடியில் உள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுத்து கனிமொழி கிராம சபை கூட்டங்களை நடத்துகிறார் என்றும், கீதா ஜீவனே கனிமொழிதான் நமது தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டரங்களில் சொல்லியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு, எதிர்ப்பு என்பதைத் தாண்டி அதிமுக அரசு கையாண்ட விதத்தை மக்கள் ஆதரிக்கவில்லை. ஆகையால் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கக் கூடும் என்று கனிமொழி பெரிதும் நம்புகிறார். கூடுதலாக நாடார் சமூக வாக்குகளைக் குறிவைத்தே கனிமொழி தூத்துக்குடியைத் தேர்ந்தெடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
(Visited 51 times, 1 visits today)
0