சமூகத்தில் மேல் ஜாதி – கீழ் ஜாதி,ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. ஏழைகளும், தாழ்ந்த நிலையில் உள்ளவர்களும் கடவுளை போன்றவர்கள். அவர்களுக்காக சேவையாற்ற வேண்டும். அது போன்ற நலிந்தவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை வழங்க வேண்டும். ஏழைக்கு தொண்டாற்றுவது, கடவுளுக்கு செய்யும் சேவைக்கு சமம் என்று நிதின் கட்கரி சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், எத்தனை ஜாதிகள் உங்கள் பகுதிகளில்உள்ளது என எனக்குத் தெரியாது. ஜாதி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் எங்கள் பக்கம் எந்த ஜாதியும் இல்லை. ஜாதியை பற்றி பேசினால் அடிப்பேன் என அனைவரிடமும் நான் சொல்லுவதுண்டு. சமூகத்தில் ஜாதி மற்றும் மத வேறுபாடு இன்றி இருக்க வேண்டும் என்றார்.
(Visited 24 times, 1 visits today)
0