தினம் ஒரு குறள்
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
செய்யவேண்டிய கடமையை முற்றும் உணர்ந்து, வேற்றரசர் மனநிலை, காலச் சூழல் போன்றவை ஆராய்ந்து, தெளிந்து, தெரிந்து, தாம் சொல்ல எண்ணும் வகைகளுக்கேற்ப, மாற்று அரசர் விளங்கி, இருவரும் செய்திகளை தங்கு தடையின்றிப் பகிர்ந்து கொள்ளும் இடமறிந்து, மிகுந்த முன்யோசனையோடு தனது உரையை எடுத்துச் சொல்லும் வல்லமை பெற்றவனே தூதரில் மிகுந்த செம்மையுடையவன் ஆவான்!
முதல் இரண்டு பாட்டில் குணங்களாக களைச் சொன்னவர், அடுத்த ஐந்து பாட்டில், தூதனுக்கான தகுதியை வரையறை செய்கிறார். இவ்வாறாக, தனது நாட்டின் சர்வ நிலையும் பலம், பலவீனம் அறிந்து, அடுத்த நாட்டு அரசனிடம் தூது செல்பவன் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை விவரிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
(Visited 19 times, 1 visits today)
0