செய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாடு  மின்சார வாரியம் உதவிப் பணியாளர் அல்லது தடகளப்பணியாளர்(Gangman) பணிக்கு 5000 காலி இடங்கள் உள்ளன என அறிவித்துள்ளது. அதற்கான நேர்முகத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது..

இந்த பணிக்கு முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்கண்ட தகவல்களை படித்துப் பார்த்து தகுதியானவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கான இந்த பணியிடத்திற்கு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000 கட்டணமும், இதர மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ. 500 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடத்திற்காக முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும், பிறகு நேர்முக தேர்வு நடத்தப்படும். அதன்மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 22 ஏப்ரல் 2019.
காலிப்பணியிட விவரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 5000

பணியிட பதவி பெயர் (Post Name)

Gangman (Trainee)- தடகளப்பணியாளர் அல்லது உதவி பணியாளர்

கல்வித் தகுதி:

தமிழ் வழியாக கல்வித் திறன் பெற்றிருக்க வேண்டும். வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 5-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

பணியிடங்கள்: 

கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சென்னை

வயது வரம்பு:

அதிகப்பட்சமாக 40 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

(Visited 33 times, 1 visits today)
+2
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close