சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

யாருக்கு வாக்களிக்க வேண்டும் தமிழக பிராமணர்கள்? -விஸ்வகர்மா

தமிழகத்தில் பிராமண காழ்ப்பு பிராமண வெறுப்பு என்பது கிட்டத்தட்ட நூறு வருடங்களாக தீரா விட இயக்கங்களினால் தமிழர்களின் ஆழ் மனதில் பதிக்கப் பட்டு விட்ட ஒரு நச்சு விதை. தமிழகத்தில் கடவுளே வந்து பிறந்தாலும் கூட அவரிடமும் கூட கிஞ்சித்தாவது பிராமண வெறுப்பு இல்லாமல் இருக்காது என்பதே தமிழக யதார்த்தமாக உள்ளது. ஆனால் அந்த நச்சுப் பிரசாரங்களையும் மூளைச் சலைவைகளையும் மீறி பல கோடி தமிழர்கள் பிராமண வெறுப்பில் இருந்து மீண்டு வந்து கொண்டேயிருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

 

நான் இருக்கும் ஒரு சில வாட்சப் க்ரூப்புகளில் தீரா விட திக திமுக கழிசடைகளையும் விட மிக அதிகமான திமுக , தி க பாசத்தையும் மோடி வெறுப்பையும் இந்திய வெறுப்பையும் இந்து வெறுப்பையும் பல பிராமணர்களிடம் காண்கின்றேன், தங்களின் ஜாதி முத்திரைகளை மறைத்து எப்படியாவது அந்தத் தீண்டாமையில் இருந்து மீண்டு வருவதற்காக சில பிராமணர்கள் தி க திமுக ஆதரவாளர்களாக, இந்து விரோத இந்திய விரோதிகளாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி, மாறி இன்று முழுமையான குரோதம் கொண்ட தீவீரமான பிராமண வெறுப்பாளர்களாக மாறி விட்டார்கள்.

 

தங்களை அனுதினமும் அசிங்கப் படுத்தும் ஒரு கட்சி தி மு க என்பதை இந்த பிராமணர்கள் இன்னும் உணரவில்லை. பதிலாக அந்தக் கட்சிகளுக்கு அடிமைகளாக சேவகம் செய்பவர்களாக மாறிப் போனார்கள். சின்னக் குத்தூசிகளும், வாலிகளும் அழியாமல் வளர்ந்து வருகிறார்கள்.

 

அப்படி புத்தி பேதலித்த, தன்மானத்தை இழந்த, மூளையை அடகு வைத்த பிராமணர்கள் குறித்து கூட எனக்கு அவ்வளவு கவலை இல்லை, அவர்கள் மீட்கப் படவே முடியாத மன நோயாளிகளாக தேச விரோதிகளாக சுய ஜாதி வெறுப்பாளர்களாக மாறிப் போய் விட்டார்கள். சிலர் காசுக்காக விலை போகிறார்கள். இன்னும் சிலர் தங்களை அப்படி நிறுவிக் கொள்வதே முற்போக்கு என்றும் புத்தி ஜீவித்தனம் என்றும் நம்பி அதுவாகவே மாறிப் போன மடையர்கள். கமலஹாசன்களும், பி ஏ கேக்களும் அது போன்ற போலி அறிவு ஜீவிகளுக்கான உதாரணங்கள். அது ஒரு விதமான முற்றிய மன நோய்.

 

என் கவலை அக்கறையெல்லாம் திமுக வும் திகவும் காங்கிரஸும் தங்களை அழிக்க முடிவு செய்த கட்சிகள் என்பதை நன்கு உணர்ந்த, திமுக காங்கிரஸ் குடும்பக் கட்சிகள் ஊழல் கட்சிகள் நாட்டையே நாசக்கேடாக்கக் கூடிய கட்சிகள் என்பதையும் உணர்ந்த பிராமணர்கள் பெரும்பாலானோர் எந்தவிதமான சமூகப் பொறுப்பும் இன்றி தேசப் பற்று இன்றி தேர்தல் நாள் அன்று ஓட்டுப் போடாமல் இருப்பதோ அல்லது நோட்டாவுக்குப் போடுவதை பெருமை என்று நினைப்பவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு:

 

ஐயா பிராமணர்களே

 

தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் இந்தக் குலத்தில் பிறந்து விட்டீர்கள். நீங்கள் இந்த ஜாதியில்தான் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வந்து பிறக்கவில்லை. ஆனால் அப்படி இந்த ஜாதியில் பிறந்ததினாலேயே நீங்கள் கடுமையாக வெறுக்கப் படுகிறீர்கள். நீங்கள் எந்தத் தவறும் செய்யாமல் இருந்தாலும் கூட வெறுக்கப் படுகிறீர்கள்

 

அப்படியான வெறுப்பை உங்கள் மீது தூண்டி, அதற்கு உரமூட்டி, தீ ஊட்டி வளர்த்தது இந்த தி க , திமுக அமைப்புகள் என்பதை நீங்கள் ஏன் உணர மறுக்கிறீர்கள்?

 

உங்கள் இருப்பையே விரும்பாத உங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கத் துடிக்கும் இந்த அமைப்புகளை எதிர்த்து நீங்கள் செய்யக் கூடியது உங்களிடம் உள்ள ஒரே ஒரு கருவி உங்களிடம் உள்ள இந்த வாக்குச் சீட்டுதான்.

 

ஆகவே உங்களை அழிக்கத் துடிப்பவர்களை உங்கள் இனத்தையே ஒட்டு மொத்தமாக ஒழிக்க நினைப்பவர்களை எதிர்த்து நீங்கள் தயவு செய்து உங்களிடம் உள்ள ஒரே ஒரு கருவியை இந்த தேர்தல் நேரத்திலாவது பயன் படுத்துங்கள். தயவு செய்து அந்த ஓட்டை வீணடித்து கூடவே உங்கள் எதிர்காலத்தையும் உங்கள் சந்ததியினரது எதிர்காலத்தையும் வீணடித்து விடாதீர்கள். தயவு செய்து ஓட்டுப் போடுங்கள். திமுக கூட்டணியை எதிர்த்து ஓட்டுப் போடுங்கள் உங்கள் ஓட்டுக்களையும் உங்கள் உறவினர்கள் ஓட்டுக்களையும் தவறாமல் திமுகவை எதிர்த்து செலுத்துங்கள்.

 

திமுக கூட்டணியை எதிர்த்து ஓட்டுப் போடுவது என்றால் யாருக்குப் போடுவது என்ற கேள்வி அடுத்து பலருக்கும் எழலாம்.

 

சந்தேகமேயில்லாமல் அனைத்து பிராமணர்களும் பா ஜ க வுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும். ஏனென்றால்:

 

  1. முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கும் மிடில் க்ளாஸ் குடும்பங்களுக்கும் வேலைகளிலும் கல்விகளிலும் 10% ரிசர்வேஷன் அளித்தது மோடி தலமையிலான பா ஜ க அரசு,. இது உங்கள் வாரிசுகளுக்கு வருங்காலத்தில் பெரும் உதவியாக இருக்கப் போகிறது. பிராமணர்கள் நன்றி மறந்தவர்கள் நன்றி கெட்டவர்கள் என்ற அவப் பெயர் பெறலாமா? மோடியின் இந்த உதவியை மறக்கலாமா? ஆகவே வாக்களிப்பீர் தாமரைக்கு

 

2. பிராமணத் துவேஷத்தையும் வெறுப்பையும் வளர்க்கும் கட்சி திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும். பூணூல்களை அறுக்கும் கட்சி திமுகவும் அதன் கூட்டணியும். நீங்கள் தெய்வமாக வணங்கும் ஆண்டாள் தாயாரையும், ராமரையும், சிவனையும், அன்னை மீனாட்சியையும் அனுதினமும் அவமதிக்கும் ஆபாசமாக வசை பாடும் ஆட்கள் ஸ்டாலினும் வீரமணியும் அவர்கள் கூட்டாளிகளும். உங்களை மட்டும் அல்ல உங்கள் நம்பிக்கைகளை மட்டும் அல்லாமல் உங்கள் தெய்வங்களையும் நிந்தனை செய்பவர்களுக்கா உங்கள் ஓட்டு? அவர்களை ஒழிக்க வேண்டாமா? அழிக்க வேண்டாமா? ஆகவே வாக்களிப்பீர் தாமரைக்கு

 

3. இந்து மதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்று மாநாடு நடத்தியவர் திருமாவளவன் அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் ஸ்டாலினும் கம்னியுஸ்டுகளும் காங்கிரஸ்காரர்களும் கமலஹாசனும் வைகோவும் அவர்களையா நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்கள். மாறாக உங்கள் நம்பிக்கைகளை மதிக்கும் கட்சியினரான அதிமுக, பாஜகா வையல்லவா நீங்கள் ஆதரிக்க வேண்டும்? ஆகவே வாக்களிபீர் தாமரைக்கு

 

4. சபரிமலையின் பாரம்பரியத்தை குலைத்தவர்கள் கம்னியுஸ்டுகள் அதை ஆதரித்தவர்கள் திமுகவினர். ஆகவே உங்களின் ஆதார நம்பிக்கைகளையும் பாரம்பரியத்தையும் அழிக்க நினைப்பவர்களுக்கா உங்கள் ஓட்டு அவர்களை தோற்கடிக்க நீங்கள் செய்ய வேண்டியது உறுதியாக ஒற்றுமையாக ஓட்டளிக்க வேண்டியது பா ஜ க வுக்கு அல்லவா?

 

5. உங்களை அழிப்பது, உங்கள் நம்பிக்கைகளை அழிப்பது, உங்களது ஆணி வேரான இந்து மதத்தையே ஒழிப்பது எல்லாம் திமுக கூட்டணியினர் செய்து வருகிறார்கள். மாறாக மோடி உங்களுக்கு ரிசர்வேஷன் அளிக்கிறார். உங்கள் நம்பிக்கைகளையும் கோவில்களையும் காக்க உறுதி பூணுகிறார். தேச வளர்ச்சியில் ஈடுபடுகிறார் அவருக்குப் பின்னால் நீங்கள் அனைவரும் நிற்க வேண்டாமா? அவரது கரங்களை வலுப்படுத்த வேண்டாமா? ஆகவே வாக்களிப்பீர் தாமரைக்கு. ஆதரிப்பீர் பா ஜ க கூட்டணியை

 

6. இன்னும் சில அசட்டு பிராமணர்கள் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதும் வீணாய்ப் போன கமலஹாசன் போன்ற சொந்த வாழ்வில் நேர்மை யோக்கியமில்லாத குழப்பவாதிகளுக்கு ஓட்டுப் போடுவதும் அறிவான செயல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. அது திமுக கூட்டணியைத்தான் வலுப்படுத்தும். மேலும் கமலஹாசன் போன்றவர்கள் கம்னியுஸ்டுகளின் பினாமிகள். இந்து வெறுப்பாளர்கள். நோட்டாவுக்குப் போடும் ஓட்டுக்களும் உங்களை அழிக்கத் துடிக்கும் திமுகவே சாதகமாக போய் முடியும். ஆகவே மறக்காமல் தவறாமல் உறுதியாக ஒற்றுமையாக நீங்கள் வாக்களிக்க வேண்டியது பா ஜ க கூட்டணிக்கு மட்டுமே.

 

உங்களுக்காக ரிசர்வேஷன் கொண்டு வந்த, உங்களின் சந்ததியினரின் எதிர்காலத்திற்காக வளமான இந்தியாவை உருவாக்கி வரும், உங்கள் மத நம்பிக்கைகளை காத்து வரும் பாரதப் பிரதமர் மோடி மேலும் ஆட்சியில் தொடர்ந்தால் அன்றி உங்கள் உரிமைகளும் பாதுகாப்பும் காக்கப் படாது. உங்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் தன்மானத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றால் அந்தப் பாதுகாப்பு தொடர வேண்டும் என்றால் நீங்கள் ஆதரிக்க வேண்டியது பாஜ க கூட்டணி மட்டுமே

 

அப்படி நீங்கள் பா ஜ க கூட்டணியை ஆதரிக்காமல் நன்றி கெட்டுப் போய் ஒரு நோட்டாவுக்கோ, கமலஹாசன்களுக்கோ அல்லது திமுகவுக்கொ ஓட்டுப் போட்டால் அது நீங்கள் உங்கள் வாரிசுகளுக்குச் செய்யும் துரோகமாக அமையும். உங்கள் கடவுள் நம்பிக்கைக்கு எதிரான பாவச் செயலாக அமையும். எத்தனை மந்திரங்கள் ஜெபித்தாலும் , எத்தனை காயத்ரி மந்திரம் சொன்னாலும், எத்தனை கோவில்களுக்குச் சென்றாலும் தீராத ஒரு பாவமாக எந்த பரிகாரமும் இல்லாத செய்யக் கூடாத ஒரு பாவமாக அமைந்து விடும்.

 

ஆகவே பிராமணர்களே வாக்களியுங்கள் தவறாமல் வாக்களியும் அவசியம் வாக்களியுங்கள். பாஜக கூட்டணிக்கு மட்டுமே வாக்களியுங்கள். மோடியின் கரத்தை வலுப்படுத்துவதன் மூலமாக உங்கள் நம்பிக்கைகளுக்கும் பாதுகாப்புக்கும் எதிர்காலத்தும் ஆதரவாக வாக்களியுங்கள்

 

ஒவ்வொரு பிராமணரும் பாரதியையும், வ வே சு ஐயரையும், சுப்ரமணிய சிவாவையும் தங்கள் முன்னோடிகளாகக் கொண்டு தேசப் பற்றுடன் பா ஜ கவை ஆதரிக்க வேண்டும். மாறாக என்.ராமையும், கமலஹாசனையும், மணி சங்கர ஐயரையும் முன்னோடியாகக் கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தால் நீங்கள் ஏழேழு ஜென்மங்களுக்கும் தீராத பாவத்தைச் செய்தவராவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

 

தர்மம் வெல்லட்டும்

தாமரை வெல்லட்டும்

அந்தணர் ஓட்டு

அறவோர்க்குச் செல்லட்டும்

நல்லவர் வாக்குகள்

நரேந்திரனுக்கே போகட்டும்

எழுத்து : விஸ்வகர்மா

(Visited 210 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close