புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிக்ரி காமன்வெல்த் தீப்பாய தலைவர் பதவியை நிராகரித்துள்ளார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்குவது தீர்மானிக்கும் பிரதமர் தலைமையிலான குழுவில் இடம்பெற்றவர் நீதிபதி சிக்ரி. நீதிபதி ரஞ்சன் கோகாய் தாமே சிபிஐ தலைவராக இருந்த அலோக் வர்மா வழக்கை எடுத்து விசாரணை செய்ததால் கலந்து கொள்ள முடியாது என நீதிபதி சிக்ரியை பரிந்துரை செய்து அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. ஆரம்பத்தில் நீதிபதி சிக்ரியும் சென்ற மாதம் இதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது, காமன்வெல்த் தலைவர் பதவி தனக்கு வேண்டாம் என நீதிபதி சிக்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
இந்த பதவிக்கு தனது பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என நீதிபதி சிக்ரி, மத்திய அரசுக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக இருப்பவர் நீதிபதி சிக்ரி. மார்ச் மாதம் 6 ம் தேதியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இது சம்பளம் ஏதும் இல்லாத பதவியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.