தேவார தரிசனம் – 2
இளைஞன். முகத்தைக் கவனித்தால் மிகவும் களைத்திருப்பது தெரிந்தது. நெடுந்தொலைவு நடைப் பயணமாக வந்திருக்கிறான். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும். வழி தெரியவில்லை. ஆனாலும் எதுவும் செய்யாது அங்கேயே மனதுக்குள் எதையோ முணுமுணுத்தபடி இருந்தான்.
வயதான தம்பதியர் அந்த வழியே நடந்து வந்தனர். அந்தப் பெரியவரைப் பார்த்தாலே கரம் குவித்து வணங்கச் சொல்லியது போல் இருந்தது. சிறுவன் பெரியவரையும் அந்த அம்மையாரையும் வணங்கினான். இருவன் சிரித்தபடி வணங்கினார்கள்
பெரியவர் கேட்டார் ” “யாருமில்லாத இந்த இடத்தில் நின்று கொண்டு என்ன செய்கிறாய் தம்பி, நீ யார்”
“அய்யா , என் பெயர் நம்பி ஆரூரன்.. எனக்கு திருநாவலூர். திருவெண்ணெய் நல்லூரில் இருந்து வந்து கொண்டிருக்கிறேன். அதோ தெரிகிறதே அங்கே போக வேண்டும்”
அந்தப் பையன் கை நீட்டிக் காட்டிய இடம் எதுவென்று கூட அந்தப் பெரியவர் கவனிக்கவில்லை.
” ஓ !! நீ தான் நம்பி ஆரூரன் என்பதா உனக்கு திருமணம் நிகழ்வதாக இருந்து அதை ஒரு கிழவர் வந்து தடுத்து நிறுத்தி,, இங்கே ஒரே பேச்சாக இருந்ததே அது நீ தானா அப்பனே”
“ஆம் அய்யா.. ஆனால் வந்தது கிழவரில்லை.. உங்களோடு பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.. இந்த வெள்ளத்தைக் கடந்து அந்தக் கரைக்கு போவது எப்படி என தெரியவில்லை எனக் குழம்பிக் கொண்டிருக்கிறேன்”
“புரிந்தது தம்பி.. உனக்கு உதவிடத்தானே வந்தேன்.. கொஞ்சம் இரு நான் படகு கொண்டு வருகிறேன்”
அந்த முதிர்ந்த தம்பதிகள் எப்படி எந்தப் பக்கம் போனார்கள் என நம்பி ஆரூரன் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் படகுடன் வந்தார் பெரியவர். அவரே துடுப்பை லாவகமாகப் போட்டுக் கொண்டார். சிறிய படகு ஆனாலும் நல்லவிதமாக வெள்ளத்தில் போய்க் கொண்டிருந்தது
நம்பி ஆருரனிடம் பெரியவர் பேச்சுக் கொடுத்தார் ” உன் திருமணத்தைத் தடை செய்து உன்னை அடிமையாக்கி அழைத்துக் கொண்டு போனது கிழவரில்லை என்கிறார். அது பின்னர் யார் தான் என்று சொல்லேன் . படகு கரைக்குப் போக இன்னமும் காலம் இருக்கிறது. அதுவரை உன் பிரதாபத்தைக் கேட்கிறேன்”
” அது ஈசனின் விளையாட்டு பெரியவரே.. என்ன செய்தேனோ தெரியவில்லை. ஈசன் வந்து என்னைத் தடுத்துவிட்டார். திருவெண்ணெய்நல்லூரிலே கோவிலிலே கூட்டிக் கொண்டு போய் அப்படியே லிங்கத் திருமேனியில் மறைந்தார்.. அத்தனைதான் தெரியும் எனக்கு.. இப்போதும் அந்தக் கரையிலே ஓர் ஆலய்ம் இருக்கிறது அங்கே ஈசனைத் தரிசனம் செய்யவே போகின்றேன். நீங்கள் வருவதானால் வரலாம்”
“வருகிறேன் வருகிறேன்.. நீ தரிசனம் செய்ய வேணும் என்பதால் தானே நானே வருகிறேன்.. கரை வந்துவிட்டது.. வா நீ சொன்ன ஈசனைப் போய்ப் பார்க்கலாம்”
நம்பி ஆரூரா ” கரை வந்துவிட்டது.. வா நீ சொன்ன ஈசனைப் போய்ப் பார்க்கலாம்”
நம்பி ஆருரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அங்கே லிங்கத் திருமேனியைக் காணவில்லை. சுற்றும் முற்றும் கவனித்தார் தேடினார்.. லிங்கம் தெரியவில்லை
நம்பி ஆருரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அங்கே லிங்கத் திருமேனியைக் காணவில்லை. சுற்றும் முற்றும் கவனித்தார் தேடினார்.. லிங்கம் தெரியவில்லை
அந்தப் பெரியவர் கேலி பேசினார் ” என்னப்பா சிவனைக் காணவில்லையா”
நம்பி ஆரூரன் கண்ணில் நீர் பெருக நின்றான். அந்தப் பெரியவர் வானத்தைக் காட்டி மறைந்தார். நம்பி ஆரூரன் பெரியவர் கை காட்டி திசையில் வானத்தைப் பார்க்க அங்கே ஈசன் ரிஷப வாகனத்தில் உமையம்மையோடு காட்சி கொடுத்திருந்தான்
“நம்பி ஆரூரா உன் தமிழில் எனைப் பாடக் கேட்கவே யாம் திருவிளையாடல் புரிந்தோம். வேண்டும் வரம் கேள்”
மலையார் அருவித்திரண் மாமணியுந்திக்
குலையாரக் கொணர்ந் தெற்றியர் பெண்ணை வடபால்
கலையாரல்குற்கன்னியராடுந் துறையூர்த்
தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே
நம்பி ஆருரன் கூப்பிய கரங்களுடன் கண்ணில் தாரையாய் நீர் பெருக சிவானந்தக் காட்சியில் மூழ்கி , ” எல்லாம் வல்ல இறைவா ! தாங்களே எனக்கு குருவாக இருந்து தவநெறியினை அருள வேண்டுகின்றேன்” என்பதாகப் பதிகம் பாட
நம்பி ஆருரன் இறைஞ்சியபடியே ஈசன் அவருக்கு குருவாக அமர்ந்து தவநெறி போதித்தார்
சிவஞான உலகம் நம்பி ஆரூரனை, சுந்தர மூர்த்தி நாயனாராக்கித் தொழுகிறது
—–
குறிப்பு 1
சுந்தரருக்கு ஈசன் உபதேசம் செய்த தலம் இன்றைக்கு திருத்தளூர் எனும் பெயரில் வழங்கப்படுகிறது. இதன் பழைய பெயர் திருத்துறையூர்
பண்ருட்டி எனும் ஊருக்கு மிக அருகில் உள்ளது இந்த சிவத்தலம். விழுப்புரம் கடலூர் ட்ரெயின் மார்க்கத்தில் இந்த ஊரில் ரயில் வண்டி நிலையம் உள்ளது