செய்திகள்ஜோதிடம்

தை மாத ராசி பலன்கள் – விஹாரி வருடம்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

மகர மாத (தை மாத)  ராசி பலன்கள் (15.01.2020 முதல் 12.02.2020 வரை)

சூரியன் மகர ராசிக்கு 15.01.2020அதிகாலை 1.37 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். கிரஹ நிலைகள் 15.01.2020 அன்று

மேஷ ராசி (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய) :

3ல் இருக்கும் ராகுவும், 9ல் இருக்கும் குருவும், 10க்கு போகும் சனியும் மாதம் முழுவதும் நல்ல பலன்ககளை தருவார்கள். 10ல் இருக்கும் புதன், 11ல் இருக்கும் சுக்ரன், மாத ஆரம்பத்திலும் , ராசி நாதன் செவ்வாய் மாத கடைசியிலும் நன்மை செய்வர். பொதுவாக பெரிய கஷ்டங்கள் பொருளாதார பிரச்சனைகள் இல்லாமல் நன்றாகவே இருக்கும். வருகின்ற சனிப்பெயர்ச்சியால் தொழிலில்/உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும், நல்ல நிலை உண்டாகும் பணப்புழக்கம் மிக தாராளமாக இருக்கும், இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கும், பிரிந்த உறவுகள் ஒன்று சேருவர், செவ்வாயின் பார்வை 2ம் இடத்துக்கு இருப்பதால் சிலருக்கு வீடுவாங்கும் யோகமும், புதிய வீடு குடிபோகுதலும் இருக்கும். எல்லா பிரிவினருக்கும் நன்மை அதிகம் இருக்கும், 7க்குடைய சுக்ரன் லாபத்தில் இருப்பதாலும் மேலும் கேதுவின் பார்வை பெறுவதாலும் திருமணத்தை எதிர்பார்த்து இருந்தோருக்கு திருமண்ம கைகூடும், குருவின் பார்வையால் புத்திர ப்ராப்தி சிலருக்கு உண்டாகும், ஆடை ஆபரண சேர்க்கைகளும், பொழுது போக்கு, கேளிக்கைவிருந்து என்று பங்குபெறுதல் மிக சந்தோஷமான ஒரு நிலையை தரும். ராசி நாதன் செவ்வாய் தனூருக்கு பெயர்ச்சியாகும்போது சிலருக்கு புனித யாத்திரைகள் தெய்வ வழிபாடுகளில் பங்கு பெறும் பாக்கியம் உண்டாகும். பொதுவாக இந்த மாதம் மிக நன்றாக இருக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 20,21,22

ரிஷப ராசி (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) :

ராசிநாதன் சுக்ரன் மாத ஆரம்பத்தில் 10ல் இருந்தாலும் 04.02.20க்கு பின் சந்தோஷமான நிலையை தருவார், மேலும் அஷ்டமத்தில் இருக்கும் சனிபகவான் மகரராசிக்கு பெயர்வதால் 9க்குடைய பலனையே தருவார் தந்தை வழியில் சில சிரமங்கள் இருந்தாலும், இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் முக்கால்வாசி குறைந்துவிடும், மேலும், 7ல் செவ்வாய் பலமாய் இருந்து வாழ்க்கை துணைவர் மூலம் நல்ல சூழலை உருவாக்கும், மாத பிற்பகுதியில் புதனால் மிகுந்த ஆதாயம், தொழில்/உத்தியோகத்தில் நல்ல நிலை பணப்புழக்கம் தாராளம், செல்வம் சேருதல், குழந்தைகளால் நன்மை, என்று இருக்கும், மேலும் சூரியன் 9ல் இருந்து மன தைரியத்தை கொடுப்பார், குரு பெரிய நன்மை எதுவும் செய்யாமல் இருந்தாலும் 5,9 பார்வையால் ஓரளவு நன்மை செய்கிறார், மேலும், 2,5க்குடைய புதன், 9லிருந்து 10 இடம் பெயறும்போது தொழிலில் ஒரு மேன்மையை தருகிறார். பொதுவில் இந்த மாதம் ஓரளவு நன்மை தரும் மேலும் பெரிய பாதிப்புகள் இல்லை, குடும்பத்தில் குதூகலம் உண்டாகும், மன கசப்புகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையாக இருக்கும், குழந்தைகளுடனான உறவுகள் நன்றாக இருப்பதால் சந்தோஷம் பெருகும். சிலருக்கு புதுவீடு வாங்கும் யோகம் உண்டு நல்ல வாகன வசதிகளும் உண்டாகும்,பண சேமிப்பும் இருக்கும்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 22,23,24

மிதுன ராசி (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :

30ம் தேதிக்கு பின் ராசிநாதன் பலன் தருவார், தற்போது சுக்ரன் ஒருவர் மட்டும் பலன் தருகிறார் குரு பார்வையால் பலன் உண்டாகிறது. அஷ்டம சனி கஷ்டத்தை கொடுக்காது எனினும் பார்வை நன்மை உண்டாகும், பெரிய நற்பலன்கள் இந்த மாதம் இல்லை எனினும் ஓரளவு செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும். உழைக்கும் வர்க்கம் கடுமையான முயற்சிகள் எடுத்த பின் பலனை அடையும், தொழில்முனைவோர் ஓரளவு லாபத்தை பெறுவர். மாத கடைசியில் செவ்வாயும் நன்மை செய்வதால் பணபுழக்கம் என்பது மாத மத்திக்கு மேல் இருக்கும். முயற்சிகளும் பெரிய வெற்றியை தராது, எதிலும் நிதான போக்கை கடைபிடிக்க வேண்டும், பணத்தை செலவு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும், சிக்கணம் தேவை, கடன் வாங்காமல் இருக்க வேண்டும், ஆடம்பர செலவுகளுக்கு ஏற்ற காலம் இல்லை இது. உத்தியோகத்தில் அல்லது சொந்த தொழிலில் கூட மற்றவர்களுடன் அனுசரித்து போவது மிக நல்லது, வீண் வாதங்கள் பிரச்சனையை கொடுத்து வம்பில் மாட்டிவிடும். 7ல் கேது வாழ்க்கை துணைவரின் உடல் நலத்தை பாதிக்கும் அதே போல 8ல் சூரியன் குடும்ப உறவுகளின் உடல் ஆரோக்கியத்தை பாதிப்படையச்செய்யும் மற்ற விஷயங்களிலும் நிதானமும் கவனமும் தேவை. பொதுவில் இந்த மாதம் அனைத்து பிரிவினருக்கும் ஓரளவே நன்மைகள் என்று இருப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 24,25,26

கடக ராசி (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய) :

ராசிநாதன் மாதம் துவங்கும்போது 2ல் இருக்கிறார் தனவரவு தாராளம், 7ல் சூரியன் நன்மை, மாத பிற்பகுதியில் 9ல் செல்லும் சுக்ரனும் தன்பங்குக்கு பணத்தை தருவார், சந்திரனின் சஞ்சாரம் இரட்டை ராசிகளில் இருக்கும் போது அதிக நன்மை தரும், மேலும் செவ்வாய் தன் பங்குக்கு பொருளாதார நிலையை உயர்த்துவார், 7ல் வரும் சனி வாழ்க்கை துணைவர் மூலம் பலவித லாபங்களை செய்வார், திருமணத்தை எதிர்பார்ப்போருக்கு அது நிறைவேறும் காலம் இது, 5ல் இருக்கும் செவ்வாய் சிலருக்கு புத்திர லாபத்தை தரும். பணப்புழக்கம் தாராளம், நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும், ஆரோக்கியம் மன தைரியம் கூடும், விட்டுக்கொடுத்து செல்வதும் நன்மையை தரும், பெண்களால் ஆதாயம் உண்டு, இந்த மாதம் புதிய வரவுகள், புதுவீடு, என்று மாற்றங்களை தரும் மாதமாக அமையும். அனைத்துபிரிவினர்களும் சந்தோஷமாய் இருப்பர், விரும்பிய இடமாற்றம், பணியில் உயர்வு, சம்பள உயர்வு என்று நன்றாகவே இருக்கும். சனியின் பார்வை 9ம் இடத்தில் படுவதாலும் 10ம் பார்வை வாகன சுக ஸ்தானத்துக்கு படுவதாலும் சிலர் வண்டி வாங்குவர். கல்வியில் படிப்பில் நல்ல நிலை இருக்கும். குருவின் 9ம் பார்வை தனஸ்தானத்துக்கு படுவதால் பொருளாதாறம் மிக நன்றாகவே இருக்கும். மிக ஏற்றமான மாதம் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 27,28,29

சிம்ம ராசி ( மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய) :

ராசிநாதன் 6ல் மறைகிறார் என்று கவலை வேண்டாம், 5ல் இருக்கும் குருவும், 7ல் இருக்கும் சுக்ரனும் மாதம் முழுவதும் பலனை தருகின்றனர். மேலும் 6க்கு போகும் சனிபகவான் மாத ஆரம்பத்திலேயே மறைமுக வருமானத்தை தருகிறார், சூரியனின் நக்ஷத்திரக்கால்களில் இருந்து கொண்டு எதிரிகளை அழித்து உங்கள் செயல்களை முழுமையடையச்செய்கிறார். மனதில் ஒரு தைரியம் வந்துவிடும். மேலும் செவ்வாய் மாத கடைசியில் 5ம் இடத்துக்கு பெயர்ந்து பூமி லாபத்தையும் பிள்ளைகளால் சந்தோஷத்தையும் கொடுப்பார், பிள்ளை/பெண் திருமண ஏற்பாடுகள் நடக்கும், மேலும் புதன் மாத கடைசியில் உத்தியோகம்/தொழிலில் ஒரு மேன்மையையும் பண வரவையும் கொடுப்பார். ருணரோகசத்ரு ஸ்தானத்தில் பகைவீட்டில் சூரியன் இருந்தாலும் எதிரிகளை அழித்து கடன் தொல்லைகளிலிருந்து விடுவித்து நோயற்ற நிலையை கொடுப்பதால் இதுவரை இருந்துவந்த வியாதிகள் குணமடையும் எதிரி, கடன் தொல்லைகள் விடுபடும், பொதுவாக இந்த மாதம் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றியை அடையும், குடும்பத்தில் குதூகலம் இருக்கும், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளும் புதிய வீடு குடிபோகுதலும் சிலருக்கு அமையும். சனி பெயர்ச்சியும் சாதகமாய் இருப்பதால் நாள்பட்ட வியாதிகள் குணமடையும், எதிரி தொல்லை பண பிரச்சனை வழக்குகளின் பிரச்சனை இவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். சனிபகவான் 8ம் இடத்தை பார்ப்பதால் நாள்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். நல்ல மாதம் இது.

சந்திராஷ்டமம் : ஜனவரி 30,31 மற்றும் பிப்ருவரி 1

கன்யா ராசி (உத்திரம் 2,3,4 , ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம் முடிய) :

நிம்மதி பெருமூச்சு விடும் மாதம் அர்த்தாஷ்டம சனி விலகுகிறார், பத்தில் இருக்கும் ராகு நல்ல பலனை முழுமையாக தரப்போகிறது, மேலும் 5ல் இருக்கும் சூரியன் புதன் மாதம் முழுவதும் சுப பலனை தருகின்றனர், இதுவரை கடந்த மாதங்களில் இருந்துவந்த பொருளாதார தேக்கம் உத்தியோகம்/தொழிலில் இருந்து வந்த மந்த நிலை, குடும்பத்தில் இருந்துவந்த பிரிவு சண்டை இவை அனைத்தும் விலகி நல்ல சூழல் இந்த மாதம் முதல் உருவாகி இருக்கிறது. குழந்தைகளால் நல்ல பெயரும் மன மகிழ்ச்சியும் உண்டாகும், செல்வ நிலை உயரும் பணம் தாராளம், தேவைகள் பூர்த்தியாகும், உங்கள் சமூக அந்தஸ்து உயரும், தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும், பிள்ளை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை விரும்பிய இடமாற்றம், ஆரோக்கியம் மேம்படும், குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும், மேலும் செவ்வாய் 4ம் இடமான சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது பூமி,வாகன லாபம் உண்டாகும், மாத கடைசியில் சிலர் புணித யாத்திரை மேற்கொள்ளலாம். ஆன்மீக வழியில் நாட்டம் செல்லும், கடந்த ஆண்டுகளில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் தீர ஆரம்பிக்கும், புதிய முயற்சிகள் வெற்றியை தரும், மனம் சந்தோஷம் அடையும், கனவுகள் மெய்ப்படும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். இது ஒரு நல்லதற்கான ஆரம்ப மாதம். கவலையை விட்டுவிடுங்கள்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 1,2,3

துலா ராசி (ஸித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) :

இந்த மாதம் 23ம் தேதி சனி 4ல் போய் அர்த்தாஷ்டம சனியாகிறாரே என்று பயப்படவேண்டாம். சனி உங்களுக்கு உச்சன் அதனால் அவரால் எந்த கெடுதலும் இருக்காது மேலும் பத்தாம் பார்வையாக உங்கள் ராசியைத்தான் பார்த்து கொண்டிருப்பார். மேலும் ராசியாதிபதி மாத முற்பகுதியில் மகிழ்ச்சியை தருவார், 2ல் இருக்கும் செவ்வாயும், 5ல் வரும் புதனும் நல்ல நிலைகளை உண்டாக்கி உங்கள் உத்தியோகம்/தொழிலில் நல்ல முன்னேற்றம் தருவார் பணப்புழக்கம் தாராளம், விடுபட்ட சொந்தங்கள் ஒன்று சேருதல், கணவன் மனைவிக்குள் நெருக்கம், குழந்தைகளால் சந்தோஷம், பெற்றோர்களின் ஆரோக்கியம் மேம்படுதல், புதிய முயற்சிகளில் வெற்றி, படிப்பில், மற்ற அறிவார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமாகவே இந்த மாதம் பூராவும் இருக்கும். பெண்களால் நன்மை உண்டு. துணிச்சல் கூடும், குடும்பத்தில் ஒற்றுமை, அக்கம் பக்கத்தாரோடு இணக்கமான நிலை, சமூக அந்தஸ்து உயருதல், சேமிப்பு கூடுதல், திருமணம், குழந்தை பாக்கியம் என்று சிலருக்கு உண்டாகும். பொதுவில் நல்ல மாதம் இது.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 3,4,5

விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய) :

ராசி நாதன் ராசியில் இருந்து கொண்டு நன்மை செய்ய இதுவரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த ஏழரை சனி விடுபட்டு சனிபக்வான் ஜனவரி 23முதல் 3ம் இடம் செல்ல அங்கு இருக்கும் சூரியன் மற்றும் புதன் சேர்ந்து மனதை குளிர செய்வர், மனதில் ஒரு தெம்பும் தைரியமும் உண்டாகும், மேலும் 4ல் இருக்கும் சுக்ரனும் நல்லதை செய்வதால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி, இதுவரை இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கி எதிலும் ஒரு முன்னேற்றம், பணபுழக்கம் தாராளம், செயல்படுகளில் உறுதி, நினைத்ததை சாதித்து கொள்வது, சமூக அந்தஸ்து கூடுதல், உத்தியோகம்/தொழிலில் மேன்மை நினைத்த இட மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பிரிந்த குடும்பத்தினருடன் சேருதல், கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமை உண்டாகுதல், ஆரோக்கியம் மேம்படுதல், வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடுதல் தடைபட்டு வந்த திருமண்ம கைகூடல், பிள்ளைகள் மூலம் நன்மை என்று இந்த மாதம் மிகுந்த ஏற்ற த்தை தரும் உங்கள் திட்டங்கள் யாவும் நிறைவேறும் காலம். கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்ளுங்கள் . அது உங்களுக்கு அடுத்துவரும் காலங்களை சிறப்பானதாக செய்யும்.

சந்திராஷ்டமம் : பிப்ருவரி 5,6,7

தனூர் ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1 பாதம் முடிய) :

ராசிநாதன் ராசியில், சனிபகவான் 2ம் இடம் செல்கிறார், அங்கு புதன் சூரியன் நன்மை செய்கின்றனர். பணப்பிரச்சனைகள் அனைத்தும் தீரும், அதேநேரம் ஜென்மத்தில் இருக்கும் கேது , 7ல் இருக்கும் ராகு, விரயத்தில் மாத முற்பகுதிவரை இருக்கும் செவ்வாய் என்று நல்ல பலன்களை குறைக்கும் வேலையை செய்கின்றனர். எதிலும் ஒரு எச்சரிக்கை உணர்வு தேவை, அவசரப்படுதல், வார்த்தைகளிய விடுதல் இவை துன்பத்தை தரும், பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்தவும், உத்தியோகம்/தொழில் இவற்றில் சக ஊழியரோடு அனுசரித்து செல்வது நன்மை தரும், மனம் நிம்மதியற்று இருக்கும், கேது குரு சம்பந்தம் எதிலும் ஒரு விரக்தியை கொடுக்கும், முயற்சிகளில் சோம்பல் தனத்தை அல்லது தைரியமின்மையை கொடுக்கும், எதிலும் நிதானமாக செயல்படுவது தியானப்பயிற்சிகளில் ஈடுபடுவது போன்றவை நன்மையை தரும், அவசரம் வேண்டாம். இந்த மாதம் பெரும்பாலும் சோதனைகளை அதிகம் கொடுப்பதால் பெரிய நன்மைகள் என்று ஏதுமில்லை, பெண்களால் தொந்தரவுகள் வரலாம். அக்கம்பக்கத்தவர், குடும்ப உறுப்பினர்கள் செய்யும் தொழிலில் கூட்டாளி கீழே வேலை செய்பவர், உத்தியோகத்தில் மேலதிகாரி, உடன் வேலை செய்வோர் என்று யாராக இருந்தாலும் வார்த்தைகளை நிதானித்து பேசுவது அனுசரித்து போவது இவை நன்மை தரும். இந்த மாதம் உங்களுக்கு சுமார் மாதம் எதிலும் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் :  பிப்ருவரி 8,9,10

மகர ராசி (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய)  :

வருகிறார் உங்கள் ராசிநாதன் ராசிக்கு, மேலும் ஜென்ம சூரியன் சில சிரமங்களை கொடுத்தாலும், சனி, சுக்ரனும், செவ்வாயும் உங்களுக்கு மிகுந்த நன்மைகளை செய்ய போகின்றனர். மேலும், 6ல் இருக்கும் ராகு எதிரிகளை வெல்ல வைப்பார், கடன் தொல்லையில் இருந்து உங்களை காப்பாற்றுவார், புதன் மாத பிற்பகுதியில் நிறைய லாபத்தை தருகிறார். உத்தியோகத்தில்/சொந்த தொழிலில் ஒரு முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும், குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும், கணவன் மனைவி ஒற்றுமை உண்டு. பிள்ளைகளால் சந்தோஷம் இருக்கும், விரைய குரு பகவான் சுபமான விரயங்களை தருவார் குருபகவானின் 5,9 பார்வை மிக பெரிய நன்மைகளை செய்கிறது. 9ம் பார்வை திருமணத்தை கொண்டுவந்து தரும், கடந்தகாலங்களில் இருந்துவந்த தடைகள் முற்றிலுமாக விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியை தரும், ஆரோக்கியம் மேம்படும், அக்கம்பக்கத்தாரோடு ஒரு இணக்கமான நிலை இருக்கும். சுக்ரனின் உச்சராசி பெயர்ச்சி மாத பிற்பகுதியில் பண லாபத்தை தரும், மேலும் புகழ் அதிகரிக்கும், செவ்வாய் விரயத்தில் வந்து புதிய வீடு வாங்க வைப்பார், பொதுவில் அதிக நன்மைகளை தரும் மாதமாக இந்த மாதம் அமையும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 15,16 மற்றும், பிப்ரவரி 10,11,12

கும்ப ராசி (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய)  :

லாபத்தில் இருக்கும் குருபகவான் , 10ல் இருக்கும் செவ்வாய் இருவரும் அதிக நன்மையை மாதம் முழுவதும் வழங்குகின்றனர். மேலும் சனிபகவான் விரயத்தில் வந்தாலும் தன் வீடாக இருப்பதால் சுப விரயங்களை தருவார். புதனும் சூரியனும் நன்மை ஏதும் செய்யவில்லை என்றாலும் கெடுதலை செய்ய மாட்டார்கள், மாத பிற்பகுதியில் 2ல் செல்லும் சுக்ரன் உச்சம் என்ற நிலையில் பண வரவை தாராளமாக்குவார், பெண்களால் அதிக நன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியும், உத்தியோகத்தில்/சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார். எதிரிகள் நீங்குவர், ஆரோக்கியம் பெருகும் அதேநேரம் குடும்ப அங்கத்தினரின் ஆரோக்கியத்தில் சிறு குறைவு சூரியனால் உண்டாகும். மற்றபடி பெற்றோர்கள், குடும்ப உறவுகள் பெரிய கஷ்டம் எதையும் எதிர்கொள்ள மாட்டார்கள், புதுவீடு, அல்லது புதிய இடம் மாற்றம் சிலருக்கு உண்டாகும். குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூரில் வசிப்பவர்கள் இந்த மாதம் குடும்பத்துடன் சேரும்படி மாற்றம் உண்டாகும். இருந்தாலும் பொதுவில் சில சங்கடங்களை கேது மற்றும் சூரியனால் மாதம் முழுவதும் சந்திக்க நேர்வதால் எதிலும் ஒரு கவனம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நலம் தரும். புதன் ஜென்மத்தில் வரும்போது புத்தி தடுமாற்றங்களை செய்வார், அவசரப்படுவீர்கள் கொஞ்சம் நிதானம் தேவை, நன்மை தீமை கலந்த மாதம் இது.

சந்திராஷ்டமம் : ஜனவரி 16,17

மீன ராசி (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ) :

ராசிநாதன் பத்தில் இருக்கிறார், சனிபகவான் 11ம் இடம் செல்கிறார், அங்கு புதன் சூரியன், 9ல் செவ்வாய் இவர்கள் அனைவரும் இந்த மாதம் நன்மைகளை வாரி வழங்குகின்றனர். மேலும் சந்திரன் 7ம் இடம், 9ம் இடம், 10, 11ம் இடம், 2ம் இடம் என்று வரும்போது பண புழக்கத்தை தாராளமாக தருவார், எடுத்த செயல்கள் யாவிலும் வெற்றி உண்டாகும் புதன் மாத ஆரம்பத்தில் நிலையான புத்தியை கொடுத்து நேர்வழியில் செல்ல செய்வார். மாத பிற்பகுதியில் சஞ்சலம் உண்டாகும் இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள், வீடு வாகன யோகம் சிலருக்கு உண்டு, செவ்வாயால் சிலருக்கு சொத்து வந்து சேரும், குடும்பத்தில் குதூகலம், கணவன் மனைவிக்குள் நெருக்கம், குழந்தைகளால் சந்தோஷம், பெற்றோர்களின் ஆரோக்கியம் என்று எல்லாமே நன்றாக இருக்கும், உத்தியோகம்/தொழிலில் மேன்மை உண்டாகும் சிலருக்கு புதிய உத்தியோகம் கிடைக்கும், சிலர் சொந்த தொழில் தொடங்குவர். செலவுகளை கட்டுப்படுத்தி சிக்கணமாய் இருந்தால் வரும்மாதங்களில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பொதுவில் இந்த மாதம் அதிக நன்மை தருவதாக அமையும்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 18,19

குறிப்பு : மேற்படியான பலன்கள் பொதுவானவை, தங்களுடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலனை அறிந்து செயல்படுவது உத்தமம். எல்லோரும் தங்கள் இஷ்ட தெய்வத்தை , குல தெய்வத்தை வணங்குங்கள், அன்னதானம், வஸ்திரதானம், கல்வி தானம் போன்ற தானங்களை செய்யுங்கள், சரீரத்தினால் அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள்.

அன்புடன்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, I Block, Alsa Green park, Near MIT Gate
Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
Email: mannargudirs1960@gmail.com
Phone: 044-22230808 / 8056207965 
Whats app – 8056207965
Skype ID : Ravisarangan

(Visited 182 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close