கும்பகோணம் திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். தமது தொழிலுக்குரிய ஆட்களை வேலைக்கு எடுக்க சென்ற இடத்தில் இரு இஸ்லாமியர்கள் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதனைத் தட்டிக் கேட்டுள்ளார் ராமலிங்கம். ராமலிங்கம் முன்னாள் பாமக நகர செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிலர் அவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் வருகின்றன.
இக்கொடூர சம்பவத்தை எதிர்த்து பாஜக, இந்து முன்னணி, பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது உறவினர்களும் அவரின் உடலை வாங்க முடியாது என்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 100 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து இது குறித்த தகவல்களை வழங்குகிறோம்.
இது குறிந்து ஹிந்து முன்னணி தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.