சில மாதங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. புதியதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சியின் முதல் ஷோவான இதில் நடிகர் ஆர்யாவுக்கு தான் கதாநாயகன்.
அவருக்கு பிடித்த சுஷானாவை அல்லது அபர்ணாவை இந்த நிகழ்ச்சியின் மூலம் மனைவியாக ஏற்றுக்கொள்வார் என கூறப்பட்டது. ஆனால் இதற்காக கலந்து கொண்ட 16 பெண்களையும் அவர் கண்டுகொள்ளவில்லை.
யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்தால் மற்றவர்கள் கஷ்டப்படுவார்கள் என கூறியிருந்த அவர் தற்போது நடிகை சாயிஷா சைகலுடன் அதிகமாக கிசுகிசுக்கப்படுகிறார்.
இதனால் கோபமான அந்த 16 பெண்களில் ஒருவரான குஹாஷினி, ஆர்யா நமது நேரத்தை எல்லாம் வீணாக்கிவிட்டார். போட்டியில் கடைசி 3 இடங்களில் எனது தோழியும் வந்திருந்தார். அவர் ஆர்யாவுக்காக காத்திருப்பது வீண் தான். ஏனெனில் அவர் சாயிஷாவை தான் காதலிக்கிறார் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.