பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போது வைகோ தலைமையில் கருப்பு பலூன் பறக்கவிடுவதும் மோடி ஊருக்கு கிழக்கே வந்தால் மேற்கே போய் ஒரு மைதானத்தில் Go back Modi என்று கூவி பலூன்கள் பறக்கவிட்டு, பல்லாண்டுப் பழக்கமான பிரிவினை பேசி என்ற ஆளில்லாத இடத்தில் நடத்தப்படும் ஆட்டம் இது. இதோடு சமூக வலைத்தளம் டிவிட்டரில் Go back Modi என்று # போட்டு எழுதி எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ட்ரெண்டிங் என்று பெயர்.
இதில் இப்போது ஒரு புதிய விஷயம் ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. இந்த டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்து நாங்க மோடிய ஓட ஓட விரட்டிட்டோம் ப்ரோ என்று பீற்றிக்கொண்ட நக்சல் மற்றும் அவர்களது ஆதரவு கைக்கூலிகள் எப்படி இந்த ட்ரெண்டிங் செய்தனர் என்ற விவரம் வெளிவந்துள்ளது.
ட்விட்டரில் இந்த ட்ரெண்டிங் குறித்த விவரங்களை அலச தனியான வழிமுறைகள் உள்ளன. யார் எங்கே எப்போது ட்விட்டினார்கள் என்ற விவரங்கள் அந்த அலசலில் தெரியவரும். அப்படி எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் மோடி தமிழகம் வந்த போது நடந்த go back Modi ட்ரெண்டிங்கில் பாகிஸ்தான் கை இருப்பது தெரிய வந்துள்ளது. டிவிட்டர் பயனாளர்கள் சிலர் இந்த ஆய்வில் வந்துள்ள விஷயம் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.
போலியான கணக்குகள் மூலம் இப்படி #போட்டு எழுதியது 58% பாகிஸ்தானில் இருந்து என்கிறது புள்ளிவிவரம். தமிழகத்தில் இருந்து இந்த ட்ரெண்டிங் செய்தது மொத்தம் 2% பேர் மட்டுமே. தனக்கான ஆட்களை பாகிஸ்தான் தமிழகத்தில் தேர்நதெடுக்கிறதா? அல்லது தமிழகத்தின் மோடி எதிர்ப்பு குழுக்கள் பாகிஸ்தானுடன் கைகோர்ககின்றனவா?
இந்தியப் பிரதமர் தன் நாட்டில் ஒரு மாநிலத்துக்கு வருவதை எதிர்த்து ஊடகத்தில் பாகிஸ்தான் ஏன் இப்படி அதிகப்படியான வேலைகள் செய்யவேண்டும்? மத்திய உளவுத்துறை தேசிய விசாரணை ஆணையம் ஆகிய அமைப்புகள் கவனத்தில் கொண்டு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.