புதுடெல்லி: ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் வீரர்களின் விதவை மனைவிக்கும் சட்ட ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு அனுமதி அளித்தார்.
ஏற்கனவே கேந்திரிய சைனிக் வாரியம் மற்றும் சைலா சைனிக் வாரியங்களில் உள்ள பணிச்சட்டத்தின் மூலம் உதவி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 23 times, 1 visits today)
0