கவர்னர் மாளிகையில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா
சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் கவர்னர் மாளிகையில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. மேதகு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் திரு தனபால், மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்கள், தமிழக அரசின் முதன்மை செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன், ராமகிருஷ்ண மடத்தின் துணைத்தலைவர் பூஜ்ய ஶ்ரீ சுவாமி கெளதமானந்தர், பாரதிய வித்யா பவன் தலைவர் திரு N. ரவி, தொழிலதிபர் திரு நல்லி குப்புசாமி, தமிழக பா. ஜ. க தலைவர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன், பா. ஜ. க மூத்த தலைவர் திரு இல. கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க சிகாகோ உரை குறித்த நூல் ஒன்று வெளியிடப்பட்டது. மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் நிலை வெளியிட முதல் பிரதியை மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் திரு தனபால் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
சுவாமி விவேகானந்தரின் சிறப்புகளை பற்றி மாண்புமிகு ஆளுனர் திரு பன்வாரிலால் புரோகித், மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு துணை முதலமைச்சர், மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் ஆகியோர் தமது உரையின் போது குறிப்பிட்டனர்.
– நன்றி: திரு. பாலசுப்பிரமணியன், விவேகானந்த கேந்திரம்