உலகம்
பொய்ச் செய்திகளை பரப்பாதீர்கள் -ஊடகங்களை நோக்கி ரித்விகா ;
பா.ரஞ்சித் தயாரித்து வரும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ரித்விகா, மேலும் நான்கு தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு இன்னும் குறைந்தபட்சம் ஓர் ஆண்டுக்கும் மேல் படங்களில் நடித்துக் கொடுக்கும் அளவுக்குக் கால்ஷிட் உள்ளது. இந்நிலையில் என்னைப்பற்றி ஏன் தேவையில்லாமல் பொய்ச் செய்திகளைப் பரப்புகிறீர்கள் என்று ரித்விகா ஊடக செய்தியை “டாக்” செய்து பதிலடியாக போய்ச் செய்திகளைப் பரப்பாதீர்கள் என்று ட்விட் செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரான ரித்விகாவையும் வதந்திகள் வேறொரு விதமாகத் துரத்துகின்றன. மற்ற நடிகைகளை வேறொரு நடிகருடன் இணைத்துச செய்திகள் வரும். இவருக்கோ திருமணம் என்ற செய்தி வதந்தியாக பரவுகிறது.

சில ஊடகங்களில் நடிகை ரித்விகாவுக்கு திருமணம் என்று அவரே பேட்டி அளித்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த ஆண்டு ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு .அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள போவதாகவும், திருமணத்திற்குப் பின் தனது வருங்கால கணவர் அனுமதித்தால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் பரவின
ஆனால் ஒரு குறிப்பிட்ட ஊடகத்தின் இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்காட்டிய நடிகை ரித்விகா, ‘இதுபோன்ற பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார். மேலும் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில் அவர் இல்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
(Visited 185 times, 1 visits today)
+2