தொடர்ந்து இந்துசமய சடங்குகள், கலாச்சார சார்ந்த நடைமுறைகளை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து கடுமையாக பொதுவெளியில் பேசி வருவதை அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இஸ்லாமிய சமுதாய திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், இந்து திருமண விழாவில் அக்னி குண்டம் வளர்த்து,புகையை வளர்த்து அனைவரையும் அழ வைத்து சோக நிகழ்ச்சி ஆக்கிவிடுவார்கள் எனவும், சமஸ்கிருத மந்திரங்களின் அர்த்தங்கள் அசிங்கமானவை எனவும் கடுமையான விமர்சித்து பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
ஸ்டாலின் இந்த இந்து மத விரோத பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அமெரிக்கரை நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஸ்டாலின் இது போன்ற கருத்துக்களை பேசுவதை நிறுத்திவிட்டு திராவிட கழக தலைவர் வீரமணியின் பிடியிலிருந்து வெளியேறுவது அவருக்கு நல்லது எனவும் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஸ்டாலினை விமர்சித்து பேசியுள்ளது இதவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.