மும்பை: மகாராஷ்டிராவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 48க்கு 45 இடங்களை வென்றே ஆக வேண்டும். அப்போதுதான் அது பாஜகவின் உண்மையான வெற்றி என்று பாஜக தலைவர் அமித்ஷா கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
குறிப்பாக சரத்பாவரின் சொந்த ஊரான பாராமதி ஏரியாவில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் வென்றாக வேண்டும். ஊழல் மிக்க கட்சித் தலைவர்களை தோற்கடித்தே ஆக வேண்டும் என்றார்.
மாநில பாஜகவின் தலைவரான ராவ்சஹெப் தான்வே கூறுகையில் கடந்த முறையே நாம் நமது சின்னத்தில் போட்டி இடாததால் தான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாராமதியில் தோற்றோம்.
மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், பாஜக மாநிலத்தின் 48 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தயாராக இருப்பதாகவும், அனைத்து இடங்களையும் வெல்லும் வகையிலான தொண்டர்களும் உள்ளனர் என்றும் தைரியமூட்டும் வகையில் பேசினார்.
(Visited 24 times, 1 visits today)