ஒரு வரிச் செய்திகள்சினிமாசெய்திகள்
தமிழக அரசின் தலைமை செயலாளர் – பவன் கல்யாணின் அரசியல் ஆலோசகர் ஆனார்
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ராமா மோகன ராவ்.
இவர் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தமிழ்நாட்டில் பணிபுரிந்து ,பின் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார் .
ஜெயலலிதா மறைந்த பின், முதல்வராக ஓபிஎஸ் இருந்தபோது ,இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், இன்று இவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடத்தும் ஜன சேனா அமைப்பின் அரசியல் ஆலோசகராக இன்று அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
(Visited 29 times, 1 visits today)