காஷ்மீர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்களை குறிவைத்து சுட்டுள்ளனர். இதில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
பிங்லான் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்துள்ளனர். பதிலடிக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் சுட்டதில் ஒரு மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் ஒரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)
0