கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
தெளிவான அறிவினைப் பெற்றவர்கள், நம்மை விரும்பி ஏற்றுக் கொண்டுவிட்டார் என கருதிக்கொண்டு, அவன் விரும்பாத செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்!
இன்றைய அரசியல் சூழலை அன்றே அறிந்து வைத்திருக்கிறார் வள்ளுவர்; அல்லது அன்றைய அரசியலும் இன்றைப் போலவே இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.
அதாவது, தலைவன் நம் பக்கத்தில் தான் இருக்கிறானே; தகாத செய்து தப்பித்து விடலாம் எனவெண்ணும் கூட்டம் இருக்கிறதல்லவா? அதை அறிவிலிகள்; முட்டாள்கள்; அறம் பிறழ்ந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்ட, அதற்கு எதிரான ஒன்றைச் சொல்லி, அறிவுடையோரைப் பிரித்துக் காட்டுகிறார்!
கம்ப சூத்திரத்தையே கசக்கிக் குடித்த அறிவுடைப் பரம்பரை நாமாயிற்றே என மார் தட்டும் நம்மவரின் நிலையை, கம்பனுக்கும் முன்பே வாழ்ந்த வள்ளுவர், ஏழு சொல்லில் ஏற்றத்தைப் பிரித்திருக்கிறார்!
ஏற்று நடப்பதா அல்ல கடந்து போவதா என்பதை அவரவர் அறிவுக்கே விட்டுவிடுவோம்!
– சுரேஜமீ