பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
நம்மோடு பழகியவர் தானே; நாம் முன்னமே அறிந்தவர் தானே; நமக்குப் பழையவர் தானே எனவெண்ணி, உரிமைகொண்டு பண்புக்கு ஊறு விளைவிக்கும் செயல்களைச் செய்தல், துன்பத்தையே தரும்!
ஆக, கடைசி மூன்று பாடல்களில் நம் தலைவன் தானே என்று உரிமை கொண்டு தகாதன செய்தல் கூடாது என்று வலியுறுத்துகிறார்!
இத்துடன் மன்னரைச் சேர்ந்தொழுகல் என்னும் அதிகாரம் முற்றும்!
– சுரேஜமீ
(Visited 16 times, 1 visits today)