பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவின் ஜோடியாகவும் நடித்த நடிகை விஜயலட்சுமி உயர் அழுத்தப் பிரச்சினை காரணமாக தற்போது ஐசியுவில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணி வேடத்தில் நடித்தார். பல தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். கன்னடப் படங்களில் நிறைய நடித்துள்ளார். நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்த கேம் ஷோவான தங்கவேட்டை நிகழ்ச்சியை தொகுத்து அளித்தார்.
சீமான் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக புகார் சொன்ன போது பரபரப்பாகப் பேசப்பட்டார்.
அவர் இப்போது உயர்ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
“இருந்த பணத்தை எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம், விஜயலட்சுமியின் சிகிச்சைக்காக சினிமா துறையினர் உதவ வேண்டும்” என அவரின் சகோதரி கேட்டுக்கொண்டுள்ளார்.
(Visited 250 times, 1 visits today)
0