தூத்துக்குடி: தூத்துக்குடி மக்கள் நல்வாழ்வுக்காக 100 கோடி முதலீடு செய்வதாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நீண்ட கால அடிப்படையில் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அருகில் உள்ள கிராமங்களின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்தல், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, 1 லட்சம் மரங்களை தூத்துக்குடியில் நடுதல், இளைஞர்களுக்கான திறன்பயிற்சி என பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் படியும், உச்ச நீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது எனக்கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்த வழக்கில் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்க இயலாது என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.