வரும் மக்களவைத் தேர்தலில் திருப்பூரில் அதிமுக சார்பில் எம்.எஸ்.எம் ஆனந்தன் என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயனும் போட்டியிடுகின்றனர்.
திருப்பூரில் தற்போதையை எம்பி ஆக இருப்பவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தான். பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டி பாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது.
திருப்பூர் தொகுதி அதிக அளவில் காட்டன் தொழிற்சாலைகள், சாயப்பட்டறை தொழிற்சாலைகள் நிரம்பிய தொகுதி. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தற்போது இடம் பெயர்ந்துள்ள தொகுதியும் ஆகும். அதே வேளையில் அதிக அளவில் வெள்ளாள கவுண்டர்கள் வசிக்கும் பகுதி ஆகும். இயல்பாகவே அதிமுக மிக வலுவாக உள்ள தொகுதிகளில் திருப்பூர் உள்ளது.
திருப்பூரில் தொழிலாளிகள் அதிகம் இருப்பதால் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி களம் இறங்கி உள்ளது. திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செல்வாக்கை நம்பியுள்ளது இந்திய கம்யுனிஸ்ட் கட்சி.
அதிமுக தரப்பில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக என அனைத்துக் கட்சிகளுக்கும் செல்வாக்கு உள்ளது.
தேர்தலில் எந்த அணி வெற்றி பெரும் வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதற்கான எனது தரப்பு விஷயங்களை இந்த லிங்கில் சென்று படிக்கலாம்.
2016 சட்டசபை தேர்தலில் அதிமுக அணி பெற்ற வாக்குகள் 5,85,000
2016 சட்டசபை தேர்தலில் திமுக அணி பெற்ற வாக்குகள் 4,91,000
அதிமுக அணியின் வெற்றி வாக்கு வித்தியாசம் 84,000 !!!
அதிமுக திட்டவட்டமாக வெற்றி பெரும் தொகுதிகளில் திருப்பூர் நிச்சயமாக இருக்கும். ஆகவே திருப்பூரில் அதிமுக வெற்றி பெறும் என்பதே எனது கணிப்பு. தேர்தல் முடிவில் பார்க்கலாம்.