உலகம்
பெப்ஸியும் உருளைக்கிழங்கும் -ஒரு பார்வை
திருபாய் அம்பானி ஆடை நெய்வதிலே ஆரம்பித்து எண்ணெய் கிணறு வாங்கியதும்; அடிப்படையை கட்டமைப்பது எப்படி ?. தற்சார்பு சுயசார்பிலே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்ன?
சமீபத்திலே நடந்த பெப்சியின் உருளைக்கிழங்கு பயிரிடுவது பிரச்சினையிலே பலரும் காப்புரிமை, விவசாயம் என பேசினார்களே ஒழிய யாரும் ஏன் பெப்சி உருளைக்கிழங்கு பயிரிடுகிறது என கேட்கவில்லை. யோசிக்கவில்லை. அப்படி யோசித்திருந்தால் தான் நாம் இன்னேரம் நன்றாக இருந்திருப்போமே என்கீறீர்களா அதுவும் சரிதான்.பெப்சி மட்டுமல்ல எல்லா வெளிநாட்டு உணவு தயாரிப்பு நிறுவனங்களும் அவர்களுக்கு என தனிப்பட்ட பயிர்களையோ அல்லது உணவை உற்பத்தி செய்யும் முறைகளோ வைத்திருக்கின்றன. எல்லா கம்பெனிகளும் பொது சந்தையிலே வாங்காமல் விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பயிரிடுவதில் இருந்து அறுவடை வரை பல நிலைகளிலே பரிசோதனை செய்து தான் வாங்குன்றன. இது அந்த உணவின் சுவையை எப்போதும் ஒரே அளவிலே வைத்திருக்க உதவுகிறது.
இந்திய கம்பெனிகளோ பெரும்பாலும் பொது சந்தையிலே வாங்கி உணவின் சுவையிலே கவனம் செலுத்தாமல் வாடிக்கையாளர்களை இழக்கின்றன.வெளிநாட்டு கம்பெனிகள் பயிரை ஆராய்ச்சி செய்வதில் இருந்து ,எப்படி விளைவிக்க வேண்டும் எப்படி வாங்கவேண்டும் ,அதை எப்படி தரபரிசோதனை செய்வது என்பது வரை , பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவிடுகிறன.இது தரத்தை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாது பல ஆயிக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்புக்கும் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவரவும் உதவுகிறது.
பல உணவு நிறுவனங்கள் பல்கலைகழக படிப்புகளையே நடத்துகின்றன. புதியவர்களுக்கு அவர்களாகவே பயிற்சி தருகிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்று அதை விற்றும் லாபம் பார்க்கிறார்கள்.நமது நிறுவனங்கள் ஏதேனும் இப்படி செய்கிறதா என்றால் ஒரே ஒருவர் மட்டும் பெரிய அளவிலே செய்தார் அதன் பின்பு அவரின் மகன்கள் இருவருமே கைவிட்டுவிட்டார்கள்.
அவர் திருபாய் அம்பானி. திருபாய் அம்பானி முதலிலே நூல் வியாபாரம் தான் செய்துவந்தார். பின்பு துணிக்கடை ஆரம்பித்தார். பின்பு துணியை நெய்து தயாரித்து விமல் எனும் பெயரில் கீழ் விற்க ஆரம்பித்தார். அடுத்து துணியை தயாரிக்க தேவைப்படும் பாலியெஸ்டர் உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். அடுத்து பாலியெஸ்ட்ருக்கு தேவைபப்டும் பொருட்களான நாப்தா போன்றவற்றை பெட்ரோலியத்திலே இருந்து பிரித்து எடுக்கும் தொழிற்சாலை கட்டினார். கடைசியிலே பெட்ரோலியம், இயற்கை எரிவாயு தோண்டி எடுக்கும் நிறுவனமே ஆரம்பித்தார்.
கவனியுங்கள் . முதலில் நூல், அதிலே இருந்து துணி, துணியை சொந்த பெயரிலே விற்கிறார். பின்பு நூலுக்கான மூலபொருட்கள் ஒவ்வொன்றாக தயாரிக்க ஆரம்பிக்கிறார். இறுதியிலே நிலத்தில் வெட்டி எடுப்பது வரை போகிறார்.அவருக்கு பின்பு வந்தவர்கள் இதை ஒன்று கடைபிடிக்கவில்லை. கடைபிடித்திருந்தால் ரிலையன்ஸ் போன் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். ரிலையன்ஸ் காம் இன் இணையசேவை கருவிகளும் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.இந்தியாவிலே இப்படி செய்யும் எந்த ஒரு நிறுவனமும் இப்போதைக்கு இல்லை.

அதுவும் தமிழ்நாட்டிலே கேட்கவேண்டாம். யாரேனும் செய்து விற்றால் வாங்கி விற்பார்கள் அல்லது பயன்படுத்துவார்கள் அவ்வளவு தான்.ஆப்பிள் நிறுவனம் தனக்கு தேவையான செல்போன் சிப்களை தானாகே ஆராய்ச்சி செய்து வடிமைத்து தயாரிக்கிறது.
சீன ஹுவாயி நிறுவனம் ஒருவேளை அமெரிக்கா தடை செய்துவிட்டால் என்ன செய்து என தனியே மொபைல் ஆப்பரேட்டிங் செய்தது.அவர்கள் தற்சார்பு, சுயசார்பு என்பதை எப்படி பார்க்கீறார்கள்?அவர்களே எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து முயற்சிகள் செய்து தயாரிக்கவேண்டும். அவர்களுக்கு வெளியாட்களால் பிரச்சினை வந்துவிடக்கூடாது.
நம்மூரில் என்ன சொல்கிறார்கள் .செல்போன் வேண்டாம், கணினி வேண்டாம், கற்காலத்துக்கு போய் கோவணம் கூட கட்டாம இயற்கையோடு வாழ் அது தான் சுயசார்பு என்பர் .நம்மூரிலேயும் சரவண பவன், சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் என்றெல்லாம் பல கடைகள் இருக்கிறன.என்றைக்கேனும் சரவண பவன் எல்லா இடங்களிலும் சுவை ஒரே மாதிரி இருக்க முயற்சிகள் செய்தது என கேள்வி பட்டதுண்டா?
துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் எல்லாம் இங்கே தயாரிக்கவோ அல்லது இது தான் ஒவ்வொரு பாத்திரத்துக்கு அளவீடு (ஸ்டேண்டர்ட்) என என்றைக்குமே சொல்லியிருக்கின்றன? பாத்திரத்துக்கு என்ன அளவீடு என்றால் இந்த உலோகத்திலெ செய்த இவ்வளவு தடிமன் இருக்கும், இவ்வளவு எடை இருக்கும் இந்த வகையான பொருள் இவ்வளவு ரூபாய் என சொல்லியிருக்கிறார்களா?பாத்திரக்கடைக்கு போனால் அவர்கள் வைப்பது தான் விலை, போடுவது தான் பில். அது உலோகமாக இருந்தாலும் சரி, பிளாஸ்டிக் ஆக இருந்தாலும்.துணிக்கடையாக இருந்தாலும் அதே தான். என்ன நூல், என்ன வகை, என்ன நீளம், அதுக்கு எவ்வளவு எடை எந்த கணக்கு வழக்கும் கிடையாது.யாரோ தயாரித்து விற்பார்கள் , அதை இவர்கள் வாங்கி கடையிலே வைத்திருப்பார்கள். அவ்வளவு தான்.ஆனாலும் நம்மவர் கூவுவது ஏ கார்ப்பர்ட்டே எனத்தான்.அப்புறம் எங்கிருந்து அறிவியல் வளருவது, பொருளாதாரம் வளருவது, நாமெல்லாம் எப்போது முன்னேறுவது?
ஆனால் பெப்சி ஒப்பந்தம் போட்டு செய்யுதே ? அது விவசாயிகளை அடிமையாக்கிவிடும் என கேள்வி இருக்கே ? அதுக்கு என்ன பதில் .அப்படியென்றால் பெப்சி முறையாக ஆவணப்படுத்தி எழுத்தால் ஒப்பந்தம் போட்டு விளைவித்த பின்பு அந்த விளைச்சலை இந்த விலைக்கு வாங்கும் என உறுதி தருகிறது. விவசாயி விளைச்சலை எடுத்தபின்பு எவ்வளவு விலை என்ன ஒவ்வொரு இடைத்தரகராக அலையவேண்டியதில்லை. மழை பெய்யவில்லை விளைச்சல் சரியாக வரவில்லை பெப்சியே காப்பீடும் பெற்றுத்தரும்.
இது சரியான முறையா? விவசாயி விளைச்சல் எடுத்துவிட்டு வந்த விலைக்கு விற்பது சரியான முறையா?
இது தான் விவசாயம் உள்ளான தொழில்கள் முறைப்படுத்தப்படுவது,சட்டப்படியான ஒப்பந்தம், விவசாயின் நிலத்துக்கும் உழைப்புக்கும் காப்பீடு, விளைச்சலுக்கு சரியான விலை, இதிலே ஏதும் பிரச்சினை என்றால் நீதிமன்றம் போய் இழப்பீடு பெறலாம் என இருப்பது தான் விவசாயம் வளரவும் விவசாயிகளின் பிரச்சினை தீரவும் வழி.
அதை விடுத்து ஏகாப்பரேட்டே என கூவிக்கொண்டே காடு வெளஞ்ச மச்சான் நமக்கு கையும் காலு தானே மிச்சம் என இயற்கையோடு ஒன்றி இருக்கனும் அப்படீன்னா அதுக்கு பேரு முட்டாள் தனம்.மக்களின் தேவைக்கு ஏற்ப நல்ல பயிர்களை ஆராய்ச்சி செய்து உருவாக்குவது, அதற்கான இயந்திரங்கள் தயாரிப்பது என்பதும் அதை தனியார் நிறுவனங்களே மக்களின் தேவைக்கு ஏற்ப செய்வது தான் சுயசார்பு தற்சார்பு.நம்முடைய அறிவின் தேவைக்கு யாரையும் நம்பி இல்லை என்ற நிலை வர வேண்டும் .
சீனா போல நாமே ஒரு கூகுள், பேஸ்புக், டிவிட்டர் செய்ய வேண்டும். நாமே புதியவைகை மொபைல் போன் தயாரிக்கவேண்டும்.நிறுவனங்கள் அவர்கள் விற்கும் பொருட்களை அவர்களே தயாரிப்பதோ அல்லது அதை தயாரிக்கும் நிறுவனங்களோடு ஒத்துழைத்து முன்னேற்றவேண்டும்.பெப்சியின் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி காட்டுவது அதைத்தான்.நாடு வல்லரசு ஆக அது தான் தேவை.
நன்றி :திரு ராஜா ஷங்கர்
(Visited 111 times, 1 visits today)
+3